முழங்கால் வலியை சரி செய்ய உதவும் எளிமையான 7 உடற்பயிற்சிகள்!

தினமும் சில எளிய உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் மருத்துவரை  நாடாமலேயே முழங்கால் சம்மந்தமான பிரச்சனைகளை எளிதில் சரிசெய்யலாம்.   

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2022, 07:18 AM IST
  • தினமும் சிறிது நேரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யுதல் அவசியம்.
  • The Patrick step பயிற்சி உங்கள் கால்களுக்கு உறுதியளிக்கிறது.
  • Lateral squat walks பயிற்சி முழங்கால்களை வலுவாக்கும்.
முழங்கால் வலியை சரி செய்ய உதவும் எளிமையான 7 உடற்பயிற்சிகள்! title=

1. வாக்கிங் நமக்கு நன்மைபயக்கும் என்பது தெரியும், பின்னோக்கி நடப்பதில் இருக்கும் நனமை பன்றி நமக்கு பெரிதாக தெரியாது.  தினமும் சிறிது நேரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது உங்கள் முழங்கால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

2. Tibialis raises பயிற்சி செய்ய நேராக நின்றுகொண்டு கால்களை மெதுவாக மடக்கி பாதத்தை தரையில் அழுத்திக்கொண்டு முன்னங்கால்களை மட்டும் உயர்த்தி இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்து பின்னர் மெதுவாக கீழே இறக்கவேண்டும்.  இதேபோல ஒரு நாளைக்கு 3 செட் கணக்கில் 6 முறை செய்யவேண்டும்.

மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!

3. The Patrick step  பயிற்சி செய்ய நேராக நின்றுகொண்டு ஒரு காலை மெதுவாக மடக்கி, ஒரு காலை நேராக நீட்ட வேண்டும்.  இது உங்கள் கால்களுக்கு உறுதியளிக்கிறது.

4. Lateral squat walks பயிற்சி செய்ய squat பயிற்சி செய்வது போன்ற பொசிஷனில் நின்று கொண்டு, முதலில் இடது  காலையும், இடுப்பையும் முன்னோக்கி நகர்த்தி ஒரு அடி எடுத்துவைக்க வேண்டும்.  இப்படியே சிறிது நேரம் செய்வது முழங்கால்களை வலுவாக்கும்.

health

5. Hip mobility and ankle mobility பயிற்சி செய்வது உங்கள் முழங்கால் மூட்டுகளை இலகுவாக்குகிறது.  lunges, butterfly hip stretch, frog stretch போன்ற பயிற்சிகளை செய்வது முழங்காலுக்கு நல்லது.

6. முழங்கால் பிரச்சனைகள் உங்கள் தொடை எலும்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.  அதனால் தினம் Hamstring exercisesகளை நீங்கள் செய்து வரலாம்.

7. Reverse Nordics பயிற்சி செய்ய மண்டியிடுவது போல் தரையில் அமர்ந்துகொண்டு, முதுகு புறத்தை பின்னோக்கி சாய்க்க வேண்டும், இவ்வாறு தினமும் சில நிமிடங்கள் செய்துவர உங்கள் கால்கள் வலுப்பெறும்.

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News