வயிற்றில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? அல்சராக இருக்கலாம் ஜாக்கிரதை!

Ulcer Symptoms: செரிமான அமிலங்களிலிருந்து வயிற்றைப் பாதுகாக்கும் மியூக்கஸின் தடிமனான அடுக்கு குறையும் போது ஒருவருக்கு அல்சர் நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 19, 2023, 08:57 AM IST
  • அல்சர் நோய்க்கு ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா காரணமாக அமைகிறது.
  • ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்வதும் அல்சரை உண்டாக்கும்.
  • அல்சர் நோயின் பொதுவான அறிகுறியாக எரிச்சல் மற்றும் வயிற்று வலி உள்ளது.
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? அல்சராக இருக்கலாம் ஜாக்கிரதை!  title=

அல்சர் நோயினால் ஏற்படும் புண்கள் பொதுவாக வயிறு அல்லது சிறுகுடலின் உட்புறத்தில் காணப்படும், இந்நோயின் மிகவும் வெளிப்படையான அறிகுறி வயிற்றுப் புண்கள் ஆகும்.  செரிமான அமிலங்களிலிருந்து வயிற்றைப் பாதுகாக்கும் மியூக்கஸின் தடிமனான அடுக்கு குறையும் போது அல்சர் ஏற்படுகிறது, இதனால்  வயிற்றின் புறணி திசுக்கள் அரிக்கப்படுகிறது.  பொதுவாக இரண்டு வகையான புண்கள் காணப்படுகின்றன, அவை வயிறு மற்றும் உணவுக்குழாய் புண்கள் ஆகும்.  மது அருந்துவதால் உணவுக்குழாய் புண்கள் ஏற்படும் மறுபுறம் புகைபிடித்தல், போதைப்பொருட்களின் வெளிப்பாடு போன்ற வாழ்க்கை முறை காரணிகளால் வயிற்றுப்புண் ஏற்படும்.  அல்சரின் மிகவும் பொதுவான அறிகுறி உங்கள் மார்புக்கும் தொப்புளுக்கும் இடையில் உள்ள பகுதியில் எரியும் உணர்வு அல்லது வலி ஏற்படுதல், மற்றொரு முக்கிய அறிகுறி இரத்த வாந்தி ஆகும்.  

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கொத்தமல்லி தண்ணீர்..! இதோ ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட்

ஆன்டாசிட்களை சாப்பிட்டால் அல்லது குடித்தால் இந்த வலி தீவிரமடையும்.  பெரும்பாலும் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவது அல்சர் நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது.  அல்சர் நோய் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். வயிறு அல்லது சிறுகுடலின் உள் பரப்பை செரிமான மண்டலத்தில் உள்ள அமிலம் அரிக்கும்போது, ​​பெப்டிக் அல்சர் ஏற்படலாம்.  மியூக்கஸின் சளியின் அளவு குறைந்தாலோ அல்லது அமிலத்தின் அளவு அதிகரித்தாலோ அல்சர் ஏற்படும்.

அல்சர் ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:

1) ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வயிற்றின் உள் அடுக்கு வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அல்சர் ஏற்படலாம்.  முத்தம் கொடுப்பது, உணவு மற்றும் தண்ணீர் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

2) ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை உட்கொள்வதால் வயிறு மற்றும் சிறுகுடலின் புறணியில் பாதிப்புகள் ஏற்படலாம்.  வலி மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளும் வயதானவர்களிடையே பெப்டிக் அல்சர் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

3) ஸ்டீராய்டுகள், ஆன்டிகோகுலண்டுகள், குறைந்த அளவு ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள் அல்சரை ஏற்படுத்தும்.

அல்சர் நோயின் பொதுவான அறிகுறிகள்:

1) அடிவயிற்றின் மேல் நடுப்பகுதியில் எரிச்சல் உணர்வு, வலி ஏற்படும்.  பின்னர் ஆன்டாக்சிட் சாப்பிடுவதன் மூலம் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

2) அல்சர் உள்ள இடத்தைப் பொறுத்து சாப்பிட்ட பிறகு வலி ஏற்படும்.  கேஸ்ட்ரிக் அல்சருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வயிற்று வலி அதிகரிக்கும், டியோடெனல் அல்சருக்கு சாப்பிட்ட 2-3 மணி நேரத்திற்குப் பிறகு வயிற்று வலி அதிகரிக்கும்.

3) சாப்பிட்ட உடனேயே வயிற்று பகுதியில் அதிக வலி ஏற்படும்.

4) அடிக்கடி துர்நாற்றம் அல்லது வயிறு வீக்கம் ஏற்படும்.

5) குமட்டல் அல்லது வாந்தியுணர்வு ஏற்படும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News