விலங்குகளுக்கு பொதுவாக வாசனையை முகரும் சக்தி மனிதர்களைக் காட்டிலும் அதிகம் என பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட விலங்குகளை, பல்வேறு சோதனைகளுக்கு ஆய்வாளர்கள் உட்படுத்துகின்றனர். அதன் ஒருபகுதியாக முகரும் சக்தி கொண்ட எறும்பை வைத்து புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியுமா? என்ற ஆய்வில் ஈடுப்பட்ட ஆய்வாளர்களுக்கு பாசிட்டிவான முடிவு கிடைத்துள்ளது. ஆம், எறும்புகளைக் கொண்டு புற்றுநோய் செல்களைக் கண்டறிய முடியும் என்பதை அவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | தொப்பை உடனே குறைய எளிய வைத்தியம்
பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு, அதன் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகளின்படி, சிறிதுநேர பயிற்சியைக் கொடுக்கும்போது, துர்நாற்றத்தை வைத்து உணவுகளை அடையாளம் காணும் பூச்சிகள் மூலம் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இதற்காக, எறும்புகளைக் கொண்டு முதலில் இந்த பயிற்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அதில், ஆய்வாளர்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஆய்வாளர் ஒருவர், புற்றுநோய் செல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் எறும்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன. அதேநேரத்தில் மற்ற விலங்குகளிடம் இருந்து பெற்ற முடிவுகள் எறும்புகளிடம் இருந்து பெறப்பட்ட முடிவுகளில் இருந்து மிகக் குறைவாக உள்ளது. எறும்புகள் புற்றுநோய் செல்களின் பயோமார்க்ஸர்களைக், பயிற்சிக்குப் பிறகு எளிதாக அடையாளம் காணுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
சர்க்கரைக் கரைசலை எறும்புகள் எளிமையாக அடையாளம் கண்டு கொள்வது எப்படி? என்பதை பகுந்தாய்ந்துள்ளனர். வாசனையின் அடிப்படையில் எறும்புகள் அங்கு செல்வதைக் கண்டறிந்தனர். அதனை அடிப்படையாக வைத்து புற்றுநோய் செல்களை அடையாளம் காண்பதற்கு பயிற்சி கொடுத்து, சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இருவேறு புற்றுநோய் செல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில், அவர்களுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளது. இதனால் ஆய்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அவர்களின் ஆய்வு முடிவையும் வெளியிட்டுள்ளனர். நாய்களைப் போலவே எறும்புகளுக்கும் மிகுந்த மோப்ப சக்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR