அனைவரும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால், பல நோய்கள் சிறு வயதிலேயே ஏற்பட தொடங்குகிறது. மேலும் நம் உடல் ஏற்கனவே சில சிக்னல்களை கொடுக்க ஆரம்பிக்கும், அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம். எனவே உடல் தரும் சிக்னல்களைப் புரிந்து கொண்டால், நாம் கொலஸ்ட்ரால் போன்ற கடுமையான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அத்துடன் இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் ஒரு எச்சரிக்கை மணி. இதனால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற நோய்கள் வரும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது உடல் என்ன அறிகுறிகளை அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு காரணம் என்ன
முறையற்ற வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் தான் இதற்கு காரணமாகும். குறிப்பாக புகைப்பிடித்தல், உடல் இயக்கமின்றி இருத்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, மருந்துகள் போன்றவற்றின் மூலமாக இதை கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் இவையே
கைகளும் கால்களும் மரத்துப் போகும் அல்லது உணர்வின்மை
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கை மற்றும் கால்கள் திடீரென மரத்துப் போகும். நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், கால்களுக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.
மாரடைப்பு
மாரடைப்பு என்பது அதிக கொலஸ்ட்ராலின் ஆபத்தான அறிகுறிகளில் ஒன்றாகும். முதலில், தமனிகளில் அடைப்பு காரணமாக, அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது, இது பின்னர் மாரடைப்புக்கு காரணமாகிறது.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவைக் குறிக்கிறது. இந்த அறிகுறியை கண்டறிவது எளிது. உங்கள் பிபியை அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டே இருங்கள், இதன் மூலம் பிளட் பிரஷர் அளவை தெரிந்துக்கொள்ளலாம்.
நகத்தின் நிறம் மாறும்
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, தமனிகளில் அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக நகத்தின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.
ஓய்வின்மை
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது பதற்றம் அதிகரிக்கிறது. இதனுடன் மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், சோர்வு, நெஞ்சு வலி போன்றவை ஏற்படும். அத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ