சென்னை : பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு - தந்தை அதிரடி கைது

Chennai Sexual Harassment | சென்னையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 22, 2024, 01:26 PM IST
  • சென்னையில் நடந்த கொடூர சம்பவம்
  • பெற்ற மகளுக்கு பாலியல் துன்புறத்தல்
  • மனைவி புகாரின் சிறுமி தந்தை கைது
சென்னை : பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு - தந்தை அதிரடி கைது title=

Chennai Sexual Harassment Case Father Arrested | சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜான்சிராணி(28). இவருக்கும் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என முன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி ஜான்சி ராணி கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டாவது மகளான 13 வயது சிறுமியை தந்தையின் பொறுப்பில் விட்டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை தாயை சந்திக்க வீட்டிற்கு வந்த சிறுமியை, தந்தை பின் தொரட்ந்தூ வந்து சிறுமியின் தாயிடம் சண்டையிட்டதாக தெரிகிறது.  

அப்போது அவ்வழியாக வந்த ரோந்து பணியில் வந்த இராயபுரம் போலீசார் ஒருவர் தடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமி, தனது தந்தையும், தனது பெரியப்பாவின் மகனான அண்ணன் முறை கொண்ட இருவரால் தமக்கு நேர்ந்த கொடுமையை முதல் முறையாக வாய்விட்டு  கதறி அழுது கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், பெண் ஆய்வாளர் வரலட்சுமி புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஜான்சி ராணி கூறும்பொழுது, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று தாம் புகார் அளித்ததாகவும், ஆனால் புகாரை ஏற்று கொள்ள மகளிர் போலீசார் மறுத்து, பின்னர் ஆய்வாளர் இல்லை என கூறி அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க  | தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை

மேலும், தான் காவல் நிலையம் செல்லும்போதெல்லாம் ஆய்வாளர் உள்ளே இருந்தாலூம் இல்லை என கூறியதாக தெரிவித்துள்ள ஜான்சிராணி, சிறுமியின் தந்தையும் அண்ணனும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள், அதனால் மன்னித்து விடு என தம்மை சமரசம் செய்ததாக தெரிவித்துள்ளார். அதை தாம் ஏற்று கொள்ளாமல், புகார் எழுத பேப்பரை கேட்ட நிலையில் அதை தூக்கி வீசியதாகவும் அவர் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார்.   

இது குறித்து செய்தியாளர்களிடம் சிறுமியின் தாய் ஜான்சிராணி தெரிவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு காவல் ஆய்வாளர் வரலட்சுமி வந்தார். அவரை கண்ட ஜான்சி ஆத்திரத்தில் கத்தி கூச்சலிட்டார். மகப்பேறு மருத்துவமனையில் ஜான்சி கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த மற்ற மகளிர் போலீசார் உள்ளே மருத்துவர்கள் அழைப்பதாக கூறி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் காவல்துறையினர் தாய் ஜான்சிராணி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தந்தை ஸ்டீபன் ராஜ் மற்றும் பெரியப்பாவின் மகன் திலீப் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலி காரணமாக சென்னை இராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | நேற்று ஜாமீன்... இன்று விடுதலை... சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரி பேசியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News