பல ஆண்டு திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிவது ஏன்? பிரச்சனைகளும்-தீர்வுகளும்!

Divorce Causes Problem And Solution : தற்போதைய காலக்கட்டத்தில், தம்பதிகள் ஆண்டுகள் பல கடந்த பின்பு விவாகரத்து செய்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?  

Written by - Yuvashree | Last Updated : Nov 21, 2024, 03:43 PM IST
  • பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்பவர்களும் பிரிவது ஏன்?
  • இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் என்ன?
  • இதை சரிசெய்வது எப்படி?
பல ஆண்டு திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிவது ஏன்? பிரச்சனைகளும்-தீர்வுகளும்! title=

Divorce Causes Problem And Solution : சமீப காலங்களில், பிரபலங்கள் பலர் பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண முறிவை அறிவிப்பது, மக்களிடையே உறவுகள் குறித்த கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 19 ஆண்டுகள் திருமண உறவில் இருந்த தனுஷ்-ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு பிறகு பிரிய முடிவு செய்த ஜி.வி பிரகாஷ்-சைந்தவி, சமீபத்தில் 29 ஆண்டுகளுக்கு பிறகு விவாகத்து பெற இருப்பதாக அறிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்-சாயிரா பானு என இந்த லிஸ்ட் நீண்டு காெண்டே செல்கிறது. இப்படி, காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும், பிரிய முடிவு செய்வது ஏன்? இது போன்ற பிரச்சனைகள் முற்றிப்போவதற்கு முன்பு அதை ஆரம்பத்திலேயே சரிசெய்வது எப்படி? 

பேச்சுத்தொடர்பு இல்லாமல் போவது:

பிரச்சனை: பல ஆண்டுகள் திருமண உறவில் இருப்பவர்கள், தங்களது உணர்ச்சிகளை, தங்கள் வாழ்வில் நடந்த தினசரி நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளாமல் போகின்றனர். இதனால், உணர்ச்சி ரீதியாக இவர்கள் தள்ளிப்போய் விடுகின்றனர். 

தீர்வு: 

  • இருவரும் தங்கள் உணர்வுகள் குறித்து அடிக்கடி பேச வேண்டும்.
  • ஒருவருடன் இன்னொருவர் பேசிக்கொள்ளும் போது முழு கவனமும் அந்த பேச்சில் இருக்க வேண்டும்.
  • இருவருக்கும் பொதுவான ஒரு ஆலோசகரை வைத்து பேசலாம்.

தள்ளிப்போகுதல்: 

பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் பிடித்தங்கள், இலக்குகள் மாறலாம். இதனால் இருவரும் தனித்தனி வாழ்க்கையை வாழ்வது போல இருக்கலாம்.

தீர்வு: 

  • இருவருக்கும் பிடித்தமான விஷயங்களை ஒன்றாக செய்ய வேண்டும்.
  • இருவரும் ஒரே இலக்கை வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

தீர்க்கப்படாத சண்டைகள்:

பல நேரங்களில், பழைய சண்டைகள் அல்லது விவாதங்கள் முடிக்கப்படாமல் இருந்திருக்கும். இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சனை பெரிடாகலாம். 

தீர்வு:

  • என்ன பிரச்சனையோ அதை நேரடியாக பேச வேண்டும். 
  • இது குறித்து பேசும் போது இருவரும் அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளை பகிர வேண்டும்.
  • மன்னிப்பு என்ற ஒரு வழியும் இருக்கிறது. 

மேலும் படிக்க | விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!

நிதி பிரச்சனை:

இருவரும் செய்யும் செலவுகள் வேறு படலாம். ஒருவர் அதிகமாக செலவு செய்தால், இன்னொருவர் சேமித்து கொண்டிருப்பர். இதனால், பிரச்சனைகள் வரும். 

தீர்வு:

  • இருவரும் ஒன்றாக நிதி மேலாண்மைக்கு ஒரு திட்டம் தீட்ட வேண்டும். 
  • இருவரும் அவரவர் செலவுகள் மற்றும் வரவுகள் குறித்து பேசிக்கொள்ள வேண்டும்.

நெருக்கம் ஏற்படுவதில் சிக்கல்:

பிரச்சனை : இருவருக்குள்ளூம் வருடங்கள் அதிகமாக, நெருக்கம் குறைவாகி விடலாம். 

தீர்வு: 

  • இருவரும் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நெருக்கமாக நேரம் ஒதுக்க வேண்டும்.
  • இருவருக்கும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை பேசிக்கொள்ள வேண்டும்

துரோகம்:

ஒரு உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகக்கூடியது. இதை உடைக்கும் ஒன்று, ஒரு பார்ட்னர் இன்னொருவருக்கு துரோகம் செய்வது. 

தீர்வு:

  • மன்னிக்க முடிந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் யாராலும் ஒட்ட வைத்துவிட முடியாது. 

புறக்கணிப்பது: 

ஒரு விஷயம் நமக்கு அதிகமாக கிடைக்கும் போது அதை நாம் புறக்கணிப்போம். அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதனாலும், ஒரு உறவானது உடைந்து போகலாம். 

தீர்வு: 

  • அடிக்கடி, தங்கள் பார்ட்னருக்கு பிடித்த விஷயங்களை இருவரும் செய்ய வேண்டும்.
  • வெளியில் டேட்டிங் செய்ய வேண்டும்
  • யார் இன்னொருவரை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரோ அவர் அதற்கு பொருப்பெடுத்துக்கொண்டு அதை சரிசெய்ய வேண்டும். 

மேலும் படிக்க | பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News