அதிகநேரம் தூங்குவது பிடிக்குமா பாஸ் - இதை தெரிஞ்சுக்கோங்க

தூங்குவது மன ஆரோக்கியத்துக்கு உகந்தது என்றாலும், அதிக நேரம் தூங்குவது சரியா?

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 22, 2022, 09:01 PM IST
  • அதிக நேரம் தூங்குவது உடலுக்கு ஆபத்தானது
  • தூக்கம் நபருக்கு நபர் மாறிக் கொண்டே இருக்கும்
  • அதிகம் தூங்கினால் நீரிழிவு நோய் கூட வருமாம்
அதிகநேரம் தூங்குவது பிடிக்குமா பாஸ் - இதை தெரிஞ்சுக்கோங்க title=

ஆரோக்கியமான இரவு தூக்கம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆனால் சரியான நேரத்துக்கு தூங்காமல் இருந்தால் மற்றும் நீங்கள் அதிக நேரம் தூங்கினால், ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.  நீரிழிவு, இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. அதேநேரத்தில், இங்கு பலருக்கும் அதிக நேரம் தூக்கம் என்பது எதை வைத்து தெரிந்து கொள்வது என்ற கேள்வி இருக்கிறது.

மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரக ஆரோக்கியத்துக்கு எலுமிச்சை சாறு அருமருந்தாக இருக்கும்

எது அதிகநேர தூக்கம்?

ஒருவருக்கு தேவையான தூக்கத்தின் அளவு என்பது வெறுமனே 8 மணி நேரம் என்று கூறிவிட முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கான தூக்கத்தின் அளவு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் வயது, உடலின் செயல்பாடு, பொதுவான உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களைப் பொறுத்தது. மன அழுத்தம் மற்றும் நோயின் பாதிப்பில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படும். தூக்கத்தின் அளவைப் பொறுத்தவரை நபருக்கு நபர் மாறுபடும். பெரியவர்களைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதிக தூக்கத்தால் என்ன பிரச்சனை?

அதிக நேரம் தூக்கம் என்பதை நேரத்தை வைத்து தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அந்தந்த நபர்களுக்கே தெரியும், தேவைக்கு அதிகமாக தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது. ஒருவர் அளவுக்கதிகமாக தூங்கினால், கவலை இயல்பாகவே அவர்கள் ஆட்கொள்ளும். ஆற்றல் அவர்களிடம் இருக்காது. சோம்பேறித் தனமாக இருப்பார்கள். முகத்தில் செழிப்பு தென்படாது. முக்கியமாக நினைவாற்றல் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தால், நீங்கள் தேவைக்கு அதிகமாக உறங்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவை தவிர மூச்சுத் திணறல் பிரச்சனையும் இருக்கும்.

மேலும் படிக்க | இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News