Health Benefits Of Coriander Juice: நம் உடலில் உள்ள தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக நச்சுக்களை போக்க இயற்கை வழிகள் நமக்கு தேவைப்படுகின்றன. அந்த வகையில் கொத்தமல்லி இலை தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை எளிதாக நீக்கி சிறுநீரக நோய்களை குணப்படுத்த உதவலாம்.
கொத்தமல்லி இலை அனைத்து உணவுகளிலும் உபயோகிக்கப்படும் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இந்த கொத்தமல்லி இலை சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை சரி செய்யவும் உதவும். மேலும் கொத்தமல்லி இலை நம் சிறுநீரகத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்
உங்க சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். அந்த வகையில் கொத்தமல்லி இலை சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொத்தமல்லியில் நிறைந்திருக்கும் ஆண்டிமைக்ரோபையல், கால்-கை வலிப்பு, ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறது. அதனுடன் இவை வயிற்றுப் போக்கு ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது.
கொத்தமல்லி இலை தண்ணீர் எப்படி தயாரிப்பது | How to make coriander leaf water:
முதலில் கொத்தமல்லி இலை கட்டை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அலசி கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி சுத்தமான தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பிறகு ஆற வைக்கவும். பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அதில் லெமன் ஜூஸை பிழிந்து தினமும் குடித்து வரவும். இந்த கொத்தமல்லி தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனைகளை பெருமளவில் குறைத்து விடலாம்.
கொத்தமல்லி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
1. செரிமானம்: கொத்தமல்லி இலை செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். கொத்தமல்லித் தழையை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு வாயு பிரச்சனையும் குறையும்.
2. உடலின் நச்சுத்தன்மை: கொத்தமல்லி இலை வெறும் வயிற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவும்.
3. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்: கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
4. இதய ஆரோக்கியத்தை மேம்படும்: வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலை தண்ணீர் குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்.
5. மூட்டு வீக்கம் மற்றும் வலிக்கு நிவாரணம்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொத்தமல்லி இலை தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ