தனியாவின் தனித்துவமான நன்மைகள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Health Benefits of Coriander Seeds: தனியாவில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 10:13 AM IST
  • நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்.
  • சளி மற்றும் காய்ச்சலில் நன்மை பயக்கும்.
  • செரிமானத்தை சீராக்கும்.
தனியாவின் தனித்துவமான நன்மைகள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Health Benefits of Coriander Seeds: நம் இந்திய சமையலில் நாம் பல வித மசாலாக்களை பயன்படுத்துகிறோம். இந்த மசாலாக்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்ட அப்படி ஒரு சமையலறை மசாலா பற்றியும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

நாம் அனைவரும் கொத்தமல்லி விதையான தனியாவை பல வித உணவு வகைகளில் பயன்படுத்துகிறோம். உலர்ந்த மல்லி விதைகள் மசாலாப் பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மல்லி விதைகள் மட்டுமல்லாமல், கொத்தமல்லி இலைகளும் உணவின் சுவையை அதிகரிக்கின்றன. மல்லி விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கு அளவே இல்லை. 

தனியாவில் இருக்கும் ஊட்டச்சத்து

தனியாவில் (Coriander Seeds) பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. தனியாவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதுவில் காணலாம். 

நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும் (Home Remedy For Diabetes)

உலக அளவில் நீரிழிவு நோய் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சர்க்கரை அளவை குறைப்பதில் (Sugar Control) மல்லி விதைகளை பயன்படுத்த, இரவில் ஒரு கைப்பிடி விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் விதைகளை வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கவும். சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கொத்தமல்லி விதை நீரை தொடர்ந்து குடிக்கலாம். இந்த நீர் இரத்த குளுக்கோஸைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த நீரின் நுகர்வு LDL ஐக் குறைத்து HDL ஐ அதிகரிக்கிறது.

சளி மற்றும் காய்ச்சலில் நன்மை பயக்கும் (Home Remedy For Cough and Cold)

தனியா சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராகவும் நம்மை பாதுகாக்கின்றது. கொத்தமல்லியில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலை காக்கின்றது.

செரிமானத்தை சீராக்கும் (Home Remedy For Digestion)

தனியா செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு டம்ளர் கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, விதைகளை எடுத்து, வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கவும். செரிமானம் சரியாக இல்லாதவர்கள் தினமும் இதை உட்கொள்ளலாம். கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளும் உணவு நார்ச்சத்தும் உள்ளன. இது நமது கல்லீரல் மற்றும் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால்... கிடைக்கும் நன்மைகள் இத்தனையா...!

பருக்களை குணமாக்கும் (Home Remedy For Pimples)

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி பருக்களின் பிரசனையால் அவதிப்படலாம். மல்லி விதைகள் முகப்பருவைக் குறைக்க உதவும். மல்லி விதைகள் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். இதற்கு, கொத்தமல்லி விதைகளை தண்ணீர் விட்டு அரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள், முல்தானி மிட்டி மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்த பின் நன்கு கழுவவும். மேலும் கரும்புள்ளிகளை நீக்கி பாக்டீரியா தொற்றுகளில் இருந்தும் இது பாதுகாக்கிறது.

அடர்த்தியான மென்மையான கூந்தல் (Home Remedy For Hair Growth)

ஹார்மோன் சமநிலையின்மை, பதற்றம், மயிர்க்கால்கள் பலவீனமடைதல் மற்றும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்காளால் சிலருக்கு அதிகமாக தலைமுடி உதிரும் பிரச்சனை இருக்கலாம். தலைமுடிக்கு தடவும் எண்ணெயில் மல்லி தூளை கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்தால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும். கொத்தமல்லி விதைகள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

சரும பாதுகாப்பில் உதவும் (Home Remedy For Skin Care)

தனியா தோல் அழற்சி, அரிப்பு மற்றும் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மல்லி விதைகள் வாய் புண்கள் மற்றும் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றன. வாய்ப்புண் இருந்தால், ஒரு ஸ்பூன் தனியாவை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அதை ஆறவைத்து, இந்த தண்ணீர் கொண்டு வாயை கொப்பளிக்கவும். இப்படி செய்தால் வாய் புண்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, ஊறவைத்த கொத்தமல்லி விதைகளை அரைத்து, அதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை அரிப்பு உள்ள தோலில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News