டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை நேரில் பார்வையிட்டார் சி.விஜயபாஸ்கர்

Last Updated : Sep 28, 2017, 08:43 PM IST
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை நேரில் பார்வையிட்டார் சி.விஜயபாஸ்கர் title=

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குனர் மரு. குழந்தைசாமி ஆகியோர்  நேரில் ஆய்வு செய்தனர்.

டெங்கு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்து, அதன் விபரங்களை கேட்டறிந்தார்.

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி. சென்னை அடையாறு ஐ.ஐ.டி வளாகத்திலும். சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை எழும்பூர். போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். 

Trending News