Bone Health: வயசானாலும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்! இத்தனை நாளா தெரியாம போச்சே!

Calcium Deficiency Diet: வயதாகும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்... என்றும் இளமையாக இருக்கலாம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 11:29 PM IST
  • எலும்புகள் வஜ்ரமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
  • வலுவான எலும்புகளுக்கு அத்திப்பழம் போதும்
  • உணவால் எலும்பை வலுவாக்கும் அருமையான டிப்ஸ்
Bone Health: வயசானாலும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்! இத்தனை நாளா தெரியாம போச்சே! title=

எலும்புகளின் வலுவுக்கான உணவுகள்: எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, உடலில் போதுமான கால்சியம் இருப்பது அவசியம், பாலில் இருந்து மட்டுமல்ல, மற்ற பொருட்களிலும் கால்சியம் பெறலாம். எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை நம் உடலின் முக்கிய அங்கமாகும். எலும்புகள் வலுவாக இருக்க, சரியான கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பது அவசியம், இதனால் நம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைக்கும். சரியான உணவு இல்லாததால், நமது எலும்புகள் பலவீனமடையத் தொடங்கி பிறகு ஆரோக்கியம் வீணாகிப்போய்விடும். கால்சியத்தின் சிறந்த ஆதாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

வலுவான எலும்புகளுக்கான உணவு

வயதாகும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி இருந்தால், அது கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எலும்புகளுக்கு மட்டுமல்ல, உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறப்பு உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமா? இல்லை ‘இந்த’ சீரியசான பிரச்சனைகளா?

அத்திப்பழம்
உடலில் கால்சியம் சத்து குறைவாக இருப்பவர்கள் அத்திப்பழத்தை உட்கொள்வதும் மிகவும் நன்மை பயக்கும். அத்திப்பழத்தில் கணிசமான அளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. தொடர்ந்து அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் குறைபாடே ஏற்படாது.  

முட்டை 
முட்டையை உட்கொள்வதால் உடலுக்கு புரதம் மட்டுமல்ல, கால்சியமும் கிடைக்கிறது. வேகவைத்த முட்டையில் சுமார் 50 மில்லிகிராம் கால்சியம் உள்ளது, வைட்டமின் டியின் நல்ல ஆதாரமாகவும் இருக்கும் முட்டை, கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.  

உலர் பழங்கள்
சில வகையான உலர் பழங்கள் மற்றும் விதைகள், உடலுக்கு தேவையான கால்சியம் சத்தைக் கொடுக்கிறது. அதோடு எள் மற்றும் சியா விதைகளையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கால்சியம் சத்து போதுமான அளவு கிடைக்கும்.  

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
புரதம் மற்றும் நார்ச்சத்துகளுடன், கால்சியமும் பீன்ஸ் மற்றும் பருப்புகளில் காணப்படுகிறது. உடலில் கால்சியம் சத்து குறைந்துள்ளவர்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோயாபீன், சிவப்பு மற்றும் பச்சை பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவற்றை உட்கொள்வதால் கால்சியம் கிடைக்கிறது.  

முளைகட்டிய உணவுகள்
உடலில் கால்சியம் சத்து குறைபாட்டை ஈடுகட்ட, முளைகட்டிய உணவுகளை உட்கொள்வதும் நல்லது. கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவுகளின் பற்றாக்குறையை உணவின் மூலமாகவே உடலில் அதிகரித்துக் கொள்ளலாம்.  

மேலும் படிக்க | கால் பித்த வெடிப்பு சரி செய்ய ஓட்ஸுடன் இந்த ஒரு பொருள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News