மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமா? இல்லை ‘இந்த’ சீரியசான பிரச்சனைகளா?

மாதவிடாய் தாமதமாக வந்தால் அதற்கு காரணம் கர்ப்பமாக இருப்பது மட்டுமா? பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், பலருக்கு இது தெரியாமல் குழம்பிப் போய்விடுகின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 08:18 PM IST
  • மாதவிடாய் தள்ளிப்போனால் மட்டுமே கர்ப்பம் உறுதியல்ல
  • மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணங்கள்
  • குழந்தையை தள்ளிப்போட மருந்து எடுத்துக் கொள்பவரா?
மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமா? இல்லை ‘இந்த’ சீரியசான பிரச்சனைகளா? title=

மாதவிடாய் வராவிட்டால், கர்ப்பமாக இருப்பதாக பலர் நினைத்துக் கொள்கின்றனர். கர்ப்பமாக இருப்பதாக நினைத்து மகிழ்ச்சியடைபவர்கள், சில நாட்களில் வழக்கமான மாதவிடாய் வந்ததும் சோர்ந்து போவதை கேட்டிருக்கலாம். அதேபோல, மாதவிடாய் வர தாமதமானால், அது கர்ப்பமாக இருக்குமோ என்று நினைத்து அச்சத்தில் உறைந்து போகும் பெண்களும் உண்டு. மாதவிடாய் தாமதத்தால் பல நேரங்களில் டென்ஷன் ஏற்பட்டாலும், அதற்கான காரணத்தை அறிய முயலுவதில்லை.  சில நேரங்களில் மருத்துவரிடம் செல்ல கூட தயங்குகிறோம்.

ஆனால் இது சரியான அணுகுமுறையல்ல. அதேபோல, மாதவிடாய் வரவில்லை என்றாலும், அது கருவுற்றதற்கான பொருளல்ல. சில மருத்துவ நிலைமைகள், மருந்துகள் மற்றும் பிற காரணங்கள் என பல காரணங்களால் மாதவிடாய் தாமதமாகலாம்.

மன அழுத்தம்

நாள்பட்ட மன அழுத்தம், மாதவிடாய் தள்ளிப் போவதற்கான ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். மன அழுத்தம் அடிக்கடி ஒருவரின் வழக்கமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது, தூக்கம்-விழிப்பு சுழற்சியையும் அது சீர்குலைக்கலாம், மேலும் உங்கள் மாதவிடாய்களை ஒழுங்குபடுத்தும் ஹைபோதாலமஸை பாதிக்கலாம். 

மேலும் படிக்க | ஓவர் உடல் எடையால் அவதியா? இப்படி பண்ணுங்க, 7 நாட்களில் எடை குறையும்

உடல் எடையில் மாற்றம்

எடை மாற்றங்கள் உங்கள் மாதவிடாயையும் பாதிக்கலாம். அனோரெக்ஸியா நெர்வோசா அல்லது புலிமியா போன்ற உணவுக் கோளாறுகளுடன் வாழும் மக்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஆளாகின்றனர். அதிக எடை இழப்பு மற்றும் உடல் எடை குறைவு ஆகியவை மாதவிடாய் தாமதத்தை ஏற்படுத்தும் அல்லது கருமுட்டையை வெளியிட போதுமான கொழுப்பு இல்லாததால் மாதவிடாய் முற்றிலுமாக நின்றும் போகலாம்.

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் என்பது தாமதமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் தொடர்பான நிலை ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கலாம் மற்றும் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகலாம். இந்த நிலை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது, இது கருமுட்டை உருவாதை பாதிக்கவோ நிறுத்தவோ செய்யலாம். இதனால் மாதவிடாய் வரமால் போகலாம்.  

குழந்தை வேண்டாம் என குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுவதாலும் மாதவிடாய் தள்ளிப்போகலாம். கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்டின் உள்ளது, இது கருப்பைகள் முட்டைகளை வெளியிடுவதைத் தடுக்கிறது, கருமுட்டை உருவாவதை தாமதப்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்சனைகள் (அதிக செயல்பாடு அல்லது செயலற்ற தன்மை) போன்ற நாள்பட்ட சுகாதார நிலைகளும் மாதவிடாயை பாதிக்கலாம்.

எனவே, மாதவிடாய் சீராக வரவில்லை என்றால், மருத்துவரிடம் சென்று பரிசோதித்து அவர் உறுதிப்படுத்தினால் மட்டுமே கர்ப்பமாக இருப்பதாக நினைக்கவேண்டும்.

மேலும் படிக்க | ஒல்லியாகனுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ‘இதை’ தினசரி சாப்பிட்டா போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News