பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? இது என்ன புதுக்கதை? உண்மை என்ன?

BEER Myths vs Facts: பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? பலரும் நம்பும் இந்த நம்பிக்கை உண்மையானதா இல்லை மூடநம்பிக்கைகளில் ஒன்றா? நிபுணர்கள் அளிக்கும் ‘பீர்’ விளக்கம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2023, 01:49 PM IST
  • பீருக்கும் சிறுநீரகக் கல்லுக்கும் உள்ளது நட்பா பகையா?
  • சிறுநீரகம் மனித உடலின் மிக முக்கியமான பகுதி
  • சிறுநீரகம் பழுதடைந்தால் உயிருக்கே ஆபத்து
பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? இது என்ன புதுக்கதை? உண்மை என்ன?

பீர் குடித்தால் நல்லது என்று சொல்லும் பலர் சொல்லும் காரணம். பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும் என்பது, பீர் குடிப்பவர்களின் வாயில் இருந்து வரும் சாக்குப்போக்கா? உண்மையில் வலிமிகுந்த சிறுநீரகக் கோளாறுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் கேள்விகளை தீர்த்துக் கொள்வது நல்லது. பீர் குடித்தால் சிறுநீரகக் கல் அகன்று விடும் என்பது. உண்மையில் இல்லை மூட நம்பிக்கையா? இது பற்றிய உண்மையைத் தெரிந்துக் கொள்வோம். 

இந்தியாவைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கினர்,பீர் குடிப்பதால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும் என்று நினைக்கிறார்கள். 

சிறுநீரக ஆரோக்கியம் தொடர்பான ஆய்வு
சிறுநீரக ஆரோக்கியம் தொடர்பான கணக்கெடுப்பில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர், இதில் 50 சதவீதம் பேர் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையை 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தியது தெரியவந்துள்ளது. மக்கள் இன்னும் சிறுநீரக ஆரோக்கியம் குறித்து முழுமையாக அறியவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் சிறுநீரக கற்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, தகவல்களை சரியாக தெரிந்துக்கொள்ளாமல் பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகின்றனர்.

சிறுநீரக கல் ஆபத்து காரணிகள்
சிறுநீரக கற்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் முக்கியமானவை ஆகும். இந்த இரண்டு நோய்களும் நமது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது பலருக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல், அதிக புரதச்சத்து உட்கொள்ளும் போக்கு, கற்கள் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக மாறுவகிறது என்பதும், இளைஞர்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதும் கவலைஅக்ளை அதிகரிக்கிறது.  

மேலும் படிக்க | Health Alert: உடல் எடையை குறைக்க உப்பைக் குறைத்தால் வரும் பிரச்சனைகள் இவை

நிபுணர்கள் பரிந்துரை
புனேயில், மணிப்பால் மருத்துவமனை சிறுநீரக மற்றும் ஆண்ட்ராலஜி ஆலோசகர் டாக்டர் பூபத் சிங் பாடி இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுக்கிறார்,

பீர் குடிப்பதால் சிறுநீரகக் கற்கள் நீங்கும் என்பது கட்டுக்கதை. இது உண்மை இல்லாத விஷயம். உடலில் எதிர்மறையான விளைவுகளை சிறுநீரகக் கற்கள் ஏற்படுத்தும்  என்பதுதான் உண்மை. மேலும், அதிகப்படியான பீர் குடிப்பதால், உடலில் இருந்து அத்தியாவசிய சத்துக்கள் வெளியேறி, சிறுநீரகக்கல் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்
ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். இது தவிர, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து, சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் சிறுநீரத்தில் கல் உருவாகாது.

அதோடு, புரதம் மற்றும் சிவப்பு இறைச்சியின் உட்கொள்வதைக் குறைப்பதும் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கும். எலுமிச்சை கலந்த நீரை அவ்வப்போது குடிப்பது, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | எந்த கலர் திராட்சை கொலஸ்டாராலை கட்டுப்படுத்தும்? திராட்சைப்பழ ரகசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News