கேக் சாப்பிட பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு கேக். பிறந்த நாள் நிகழ்வு, திருமண தின கொண்டாட்டங்கள், கேக் வெட்டி கொண்டாடாமல் முழுமையடைவதில்லை. கேக் பல வகைகளில், ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. அதில் பிரபலமானவை ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் ஃபாரஸ்ட் (Red Velvet and Black Forest Cake). இந்நிலையில், இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக உணவுப் பாதுகாப்பு துறை பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து கேக் மாதிரிகள் சேகரிக்கபப்ட்டு சோதிக்கப்பட்டதில் 12 வகையான கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது தெரியவந்தது. கேக்கை கவர்ச்சிகரமானதாக மாற்ற ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் ஃபாரஸ்ட் போன்ற சில வகை கேக்குகளில் செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கை நிறங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை கேக் மாதிரிகளை பரிசோதித்த போது, செயற்கை நிறங்கள் மற்றும் அல்லுரா ரெட், சன்செட் யெல்லோ FCF, போன்ஸோ 4R மற்றும் கார்மோயிசின் போன்ற தனிமங்கள் கண்டறியப்பட்டன. ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் ஃபாரஸ்ட் கேக் கவர்ச்சியாக இருக்க அதில் சேர்க்கப்படும் நிறங்கள் மற்றும் பிற பொருட்கள் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உணவுப் பாதுகாப்பு துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகளுக்கு இணங்கும் வகையில் செயல்படுமாறு பேக்கரிகளை வலியுறுத்தியுள்ளது. கேக்குகளில் பயனபடுத்தப்படும் செயற்கை வண்ணங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளதை சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் போன்ற பிரபலமான உணவுகள் கவர்ச்சிகரமாக இருக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பி என்ற ரசாயனத்தை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்தது. உணவகங்களில் இந்த ரசாயனங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்
உடல் நலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள கேக்குகளை சாப்பிடுவதை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை
1. தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு நம்பிக்கை உள்ள கடையில் இருந்து கேக் அல்லது பேஸ்ட்ரிகளை வாங்க வேண்டும். இல்லையெனில் அவற்றைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
2. பிறந்தநாள் அல்லது வேறு ஏதேனும் கொண்டாட்டத்தின் போது, பிரஷர் குக்கரில் அல்லது ஓவனில் கேக்கை நீங்களே தயாரித்து கொள்வது நல்லது.
3. கேக் தயாரிப்பது எப்படி என்பது தெரியாவிட்டால், அதனை அறிந்து கொள்ள இன்று பல வழிகள் உள்ளன. யூட்யூபில் பல வீடியோக்களை காணலாம்.
4. கேக் கவர்ச்சிகரமானதாக இருக்க, அதில் செயற்கை நிறத்தை சேர்க்க வேண்டாம். இவற்றை தவிர்ப்பதன் மூலம் உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க | மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... சில எளிய வீட்டு வைத்தியங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ