26 ஆண்டுகளாக பெண் உருவில் வாழ்ந்து வரும் ஆண்... அதிர்ச்சி ரிபோர்ட்!

சீனாவின் ஹுனானில் பகுதியை சேரந்த இளம்பெண், 26 ஆண்டுகளுக்கு பின் தான் பெண் வடிவில் வாழும் ஒரு ஆண் என அறிந்துள்ளார்!

Updated: Dec 1, 2018, 06:59 PM IST
26 ஆண்டுகளாக பெண் உருவில் வாழ்ந்து வரும் ஆண்... அதிர்ச்சி ரிபோர்ட்!
Representational Image

சீனாவின் ஹுனானில் பகுதியை சேரந்த இளம்பெண், 26 ஆண்டுகளுக்கு பின் தான் பெண் வடிவில் வாழும் ஒரு ஆண் என அறிந்துள்ளார்!

திருமணம் ஆகி ஒரு ஆண்டு முடிவடைந்தும் தான் கருவுறா நிலையில் மருத்துவரின் உதவியை நாடியுள்ளார் அந்த பாதிக்கப்பட்ட பெண். மருத்துவ பரிசோதனையில் தான் பெண் இல்லை எனவும், பெண் உருவில் 26 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆண் எனவும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சமூக பார்வையில் ஒரு பெண் என தோற்றம் ஆளிக்கும் அவர், உடல் ரீதியாக ஆணுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளார் என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றது. அவரது உடலும் தோற்றமும் உலகை மட்டும் அல்லாமல் அவரையும் நம்பவைத்தது.

ஒரு பெண்ணாக அவர் சமூக அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அவருடைய உடலில் மறைந்திருக்கும் விரைகளின் வளர்ச்சி, முழுமையடையாத பாலுறுப்புச் சுரப்பி வளர்ச்சி அவர் ஒரு ஆண் என உறுதி படுத்தியுள்ளது. 

Sexual Deformity எனப்படும் மருத்துவர்கள் தெரிவிக்கும் இந்த பாலியல் குறைபாடு, இவர் பெண் உருவில் வாழ்ந்து வரும் ஒரு ஆண் என தெரியபடுத்தியுள்ளது!