Cinnamon Spices For Health Benefits: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் உடல்நலம் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்த நோய் முதியவர்கள் முதல் சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கும் நீரிழிவு, தொப்பை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சமையல் அறையில் இருக்கும் இந்த ஒரு மசாலா பொருளை உட்கொள்ளத் தொடங்குங்கள். இதனை உட்கொண்டு வானதால் சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை அனைத்தும் கட்டுப்படுத்தலாம். அதனுடன் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்கக் கூடும்.
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நீரிழிவு மற்றும் வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் இந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்...
இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
எடை இழப்புக்கு உதவும்: இலவங்கப்பட்டை தண்ணீர் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு வளர்சிதை மாற்றத்தையையும் துரிதப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. இலவங்கப்பட்டையை தண்ணீரில் கரைத்து காலையில் குடிப்பதால் பசி குறையும். அதன் உதவியுடன், எடை எளிதில் குறைக்கலாம்.
நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்: சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை நீர் மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவுகிறது.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நன்மை தரும்: வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இலவங்கப்பட்டை நீர் மிகவும் நன்மை பயக்கும். இந்த தண்ணீர் தொப்பையை குறைப்பதோடு, செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதனுடன் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இலவங்கப்பட்டை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இலவங்கப்பட்டை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ