Pink Salt: தினமும் இந்துப்பை பயன்படுத்துவது மிகவும் ஆபத்து!

இந்துப்புக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் அளித்திருக்கிறது.  ஆரோக்கியமான உணவு உண்பதில் கவனம் செலுத்தும் பலர் தினமும் அதே உப்பைப் பயன்படுத்துகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2022, 12:15 PM IST
  • இந்துப்பு நன்மை பயக்கும் என்றாலும், நீண்ட காலத்திற்கு அதனை அதிக அளவில் உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும்.
  • அதிக அளவில் சாப்பிட்டால், சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.
  • தசைகள் பலவீனம் அடையும்.
Pink Salt: தினமும் இந்துப்பை பயன்படுத்துவது மிகவும் ஆபத்து! title=

இந்துப்புக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் அளித்திருக்கிறது.  ஆரோக்கியமான உணவு உண்பதில் கவனம் செலுத்தும் பலர் தினமும் அதே உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இந்துப்பு இளஞ்சிவப்பு  நிறத்தில் காணப்படும் உப்பு. பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிகளவில் கிடைக்கிறது. எனவே இது ஹிமாலயன் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உப்பு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். இரத்த அழுத்தத்தை  கட்டுக்குள் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தினமும் பயன்படுத்துவது, பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்துப்பினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை தெரிந்து கொள்வோம். நீண்ட காலத்திற்கு சாப்பிடுவதால், உடலில் பல சத்துக்கள் குறைபாடு ஏற்படுகிறது.

இந்துப்பு நன்மை பயக்கும் என்றாலும், நீண்ட காலத்திற்கு அதனை அதிக அளவில் உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் சாப்பிட்டால், சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். தசைகள் பலவீனம் அடையும். தைராய்டு சுரப்பியிலும் பாதிப்பு ஏற்படும். எனவே சரியான அளவில் சாப்பிடுங்கள். எனினும் ரத்த அழுத்தம் இருந்தால் இந்த உப்பை மருத்துவரின் ஆலோசனையை பெற்று எவ்வலவு சாப்பிடலாம் என்பதை அறிந்து கொள்வது நல்லது. 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

இந்துப்பின்  பக்க விளைவுகள்

அயோடின் குறைபாடு

இந்துப்பில் அயோடின் சத்து குறைவாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அயோடின் குறைபாடு வரலாம், எனவே இடையில் சாதாரண உப்பையும் உணவில் உபயோகிக்க வேண்டும். மேலும், நீண்ட காலத்திற்கு உணவில் இந்துப்பை மட்டுமே பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிக அளவு உப்பை சாப்பிடுபவர்களுக்கு உடலில் நீர் தேங்குவதில் பிரச்சனை ஏற்படும். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த  இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதிக அளவில் எடுத்துக் கொண்டால்,  இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சோர்வு மற்றும் தசை பலவீனம்

இந்துப்பை அதிகமாக பயன்படுத்தினால், உடலில் சோர்வு மற்றும் தசை பலவீனம் ஏற்படும். எனவே, கல் உப்பை சரிவிகித அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

தைராய்டு பாதிப்பு

தைராய்டு நோயாளிகள்  இந்துப்பினால் பாதிக்கப்படலாம். உடலில் அயோடின் குறைபாடு இருந்தால், தைராய்டு நோயாளியின் பிரச்சனை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News