பேக்கிங் சோடாவின் பக்க விளைவுகள்: பேக்கிங் சோடா நம் உணவில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. ஏனெனில் இது பல வகையான கேக்குகள், பிரெட், பேக்கரி பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இதனால் உணவை நொதித்தலும், மிருதுவாக்குவதும் எளிதாகிறது. சிலருக்கு சோடா வாட்டர் குடிக்கவும் பிடிக்கும். பேக்கிங் சோடாவை குறைந்த அளவில் உட்கொண்டால், அது அவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பேக்கிங் சோடாவை அதிகமாக உட்கொள்வது நம் உடலில் எவ்வாறு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
பேக்கிங் சோடா அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
1. வயிற்றில் வாயுத்தொல்லை
பேக்கிங் சோடாவை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். இது வயிற்று பலி மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்துகின்றது. நாம் சோடாவை உட்கொள்ளும் போதெல்லாம், அது ஒரு இரசாயன செயல்முறையின் கீழ் அமிலத்துடன் கலக்கிறது. ஆகையால், எப்போதும் பேக்கிங் சோடாவை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
2. மாரடைப்பு
பேக்கிங் சோடாவில் அதிக சோடியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த பொருளின் காரணமாக, நமது இதய ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவு ஏற்படுகின்றது. அதிக அளவு பேக்கிங் சோடாவை உட்கொள்வது மாரடைப்புக்கு வழிவகுக்கலாம். அல்லது இதயத்தின் துடிப்பில் இதனால் தடை ஏற்படலாம். பேக்கிங் சோடாவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் மிகவும் குறைந்த அளவிலேயே இதை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
3. சருமக்கேடு
சிலருக்கு பேக்கிங் சோடா பயன்படுத்தினால் சருமம் சிவந்து, தடிப்புகள் ஏற்படும். இதனுடன் இதன் பயன்பாடு சருமத்தில் எரிச்சலையும் உண்டாக்கலாம். இதனை அதிகம் பயன்படுத்தினால் சருமம் மிகவும் வறண்டு போய்விடும்.
மேலும் படிக்க | டயட் வேண்டாம்.. உடற்பயிற்சி வேண்டாம்... உடல் எடையை குறைக்க சூப்பரான வழிகள்!
பேக்கிங் சோடா எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?
செரிமானக் கோளாறு உள்ள நபர்கள், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை அரை கப் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். வாரத்திற்கு 2 முறை மட்டுமே இதை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இதனால் பல அபாயகரமான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முதுகு வலிக்கு 'குட் பை' சொல்ல இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ