டெல்லியில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இறப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு கடந்த 30 நாட்களில் 169 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தயாவில் மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பாட்டு உயிரிழப்பையும், கடுமையான பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,694 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதனால், பொதுமக்களிடம் பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்த அச்சம் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இறப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Delhi: The death toll due to #SwineFlu rises to 10, at RML hospital.
In the month of January, 22 swine flu positive cases were registered at the hospital.— ANI (@ANI) January 31, 2019