சுகர் லெவல் எகிறாமல் இருக்க... ‘இந்த’ தவறுகளை ஒரு போதும் செய்யாதீங்க!

நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2023, 03:34 PM IST
  • வீட்டிலேயே தின்பண்டங்களைத் தயாரிப்பது அதிகப்படியான சர்க்கரையைத் தவிர்க்க உதவும்.
  • சிறந்த தேர்வுகளைச் செய்ய ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்.
சுகர் லெவல் எகிறாமல் இருக்க... ‘இந்த’ தவறுகளை ஒரு போதும் செய்யாதீங்க! title=

ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது நீரிழிவு நோயை பட்டுப்படுத்துவதன் ஒரு முக்கிய பகுதியாகும். சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், நீரிழிவு சில கடுமையான உடல் நல சிக்கல்களுக்கு வழி வகுக்கும். இருப்பினும், பலர் தினசரி அடிப்படையில் அறியாமல் சிறிய தவறுகளை செய்கிறார்கள், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கும். நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த தேர்வுகளைச் செய்ய ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். 

 நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகளை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

1. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது

கெட்ச்அப், கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதில் சர்க்கரைகள் அதிகம் இருக்கின்றன எபது பலருக்கு தெரிவதில்லை. இவை ஆரோக்கியமற்றவை மற்றும் போதைப்பொருள். எனவே, பசியை போக்க ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலேயே தின்பண்டங்களைத் தயாரிப்பது அதிகப்படியான சர்க்கரையைத் தவிர்க்க உதவும். மேலும் உணவு பொருட்கள் ஆரோக்கியமாக தயாரிக்கப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

2. உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை (Diabetes Control) கட்டுப்படுத்தவும் இது உதவும். போதுமான அளவு உடல் இயக்கம் இல்லாத நிலை, எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு நடைபயிற்சி அல்லது யோகா மிகவும் நல்லது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதில்லை. சில எளிய பயிற்சிகளே போதும்.

3. உண்ணும் முன் உணவுகளின் ஜிஐ அளவை (GI) சரிபார்க்காமல் இருப்பது

உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் (High Glycemic Index - GI) உணவுகள் இரத்த சர்க்கரையை திடீரென அதிகரிக்கும். மறுபுறம், குறைந்த ஜிஐ கொண்ட உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை சிறப்பாக கட்டுபடுத்த உதவும். எனவே, இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் நிலையான வெளியீட்டை உறுதி செய்ய சாப்பிடுவதற்கு முன், உணவுகளின் ஜிஐ மதிப்பை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க |  சுகர் குணமாக.... கசப்பில்லாத ‘பாகற்காய்’ ஜூஸ்... தயாரிக்கும் முறை!

4. போதுமான நார்ச்சத்து உட்கொள்ளாமல் இருப்பது

நார்ச்சத்து பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நீரிழிவு மேலாண்மைக்கும் உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உறுதிப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவும். முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் மற்றும் விதைகள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். நார்ச்சத்து உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதன் மூலம், ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.

மொத்தத்தில், சமச்சீர் உணவு, வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் கவனத்துடன் தேர்வு செய்யும் உணவுகள் பழக்கங்கள் ஆகியவற்றின் கலவையானது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும். நீரிழிவு கட்டுபாட்டு இல்லாமல் இருந்தால், அது கண்கள், சிறுநீரகம், இதயம் என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பொறுப்பு துறப்பு: உடல நல ஆலோசனைகளை உள்ளிட்ட இந்த கட்டுரை பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றானது இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE News பொறுப்பேற்கவில்லை.

மேலும் படிக்க |  நீரிழிவு முதல் எடை இழப்பு வரை... வியக்க வைக்கும் பார்லி புல் சாறு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News