ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பார்க்கப்படும் கறிவேப்பிலை....

கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் பல நோய்கள் குணப்படுத்தப் படுகின்றன, மேலும் இது ஆயுர்வேதத்தில் ஒரு முக்கிய மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. 

Last Updated : Dec 10, 2019, 08:11 PM IST
ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பார்க்கப்படும் கறிவேப்பிலை.... title=

கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் பல நோய்கள் குணப்படுத்தப் படுகின்றன, மேலும் இது ஆயுர்வேதத்தில் ஒரு முக்கிய மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. 

ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பார்க்கப்படும் கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகளை இன்று நாம் உங்களோடு பகிர இருக்கிறோம்...

முடியை கருமையாக்க: சிறு வயதிலேயே தலைமுடி வெண்மையாக மாறியவர்கள், அவர்கள் கூந்தலில் கறிவேப்பிலை சாறினை பயன்படுத்தினால் இயல்பு நிலை நிறத்திற்கு மீண்டுவரலாம். ஆக, கறிவேப்பிலை சாற்றினை தலைமுடியில் தடவினால் வெள்ளை முடியின் பிரச்சனையிலிருந்து விடுபட்டு முடி கருப்பாகிவிடும் என கூறப்படுகிறது.

சர்க்கரை அளவைக் குறைத்தல்: கறிவேப்பிலை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதிக சர்க்கரை உள்ளவர்கள், அதை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையத் தொடங்குகிறது மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. கறிவேப்பிலையினை தவறாமல் உட்கொள்வது நீரிழிவு நோயை ஏற்படுத்தாது.

கண்களுக்கு நன்மை பயக்கும்: கறிவேப்பிலை சாப்பிடுவது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும், அதை சாப்பிடுவதால் கண்கள் தொடர்பான நோய்கள் ஏற்படாது. உண்மையில், கறிவேப்பிலைகளுக்குள் வைட்டமின் A காணப்படுகிறது, இது கண்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது, மேலும் வைட்டமின் A கொண்டிருக்கும் உணவு சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். எனவே கண்ணாடி வைத்திருப்பவர்கள் நிச்சயமாக கறிவேப்பிலை சாப்பிட வேண்டும்.

முடி நீளமாக வளர: கறிவேப்பிலை கூந்தலுக்கும் நல்லது என்று கருதி அதை சாப்பிடுவது முடியை நீளமாக்குகிறது. இது தவிர, தலைமுடியை அதன் சாற்றில் கழுவினால், முடி வலிமை பெறுகிறது. கறிவேப்பிலை பேஸ்ட் தயாரிக்க, கறிவேப்பிலை நன்றாக அரைத்து அதில் கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பேஸ்டை முடி வேர்களில் நன்கு தடவவும். இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம், முடி வேர்களிலிருந்து வலுவடைந்து எளிதில் உடையாத அளவிற்கு உறுதியடையும்.

மலச்சிக்கலிலிருந்து நிவாரணம்: மலச்சிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் கறிவேப்பிலை சாப்பிட வேண்டும். இதை சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கி நல்ல செரிமானத்தை உண்டாக்கும். மேலும் வாயு பிரச்சனையினை நீக்கி நலம் பெற செய்யும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற ஒரு கிளாஸ் தண்ணீரில் கறிவேப்பிலை இட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரினை குளிர்ந்த பின் நன்கு வடிகட்டி பருகவும். இந்த நீரைக் பருகுவதன் மூலம் மலச்சிக்கல் நீங்கும்.

Trending News