Drone மூலம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும்! எங்கு தெரியுமா?

தற்போதைய கோவிட் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. 

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2021, 10:13 PM IST
  • Drone மூலம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும்!
  • எங்கு தெரியுமா?
  • காரணம் என்ன?
Drone மூலம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும்! எங்கு தெரியுமா?

புதுடெல்லி: தற்போதைய கோவிட் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. 

கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்த ஆண்டு இரண்டாம் அலையாக விரிந்து, மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பெறுவதில், மருத்துமனையில் படுக்கை வசதி கிடைப்பதில், ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் என நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது.

Also Read | சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?

இந்த நிலையில் மருத்துவ வசதிகளை தேவையான இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை அரசு தொடங்கியுள்ளது.

கோவிட் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வான்வழியாக மருந்துகளை விநியோகித்து சமூக இடைவெளியை பராமரிக்கும் முன்முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசிகள் கிடைப்பது முக்கிய கவலையாக இருக்கிறது. லாக்டவுன் உட்பட பல்வேறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்திற்காக ட்ரோன் விமானங்களை சோதனை முறையில் பயன்படுத்த நிபந்தனை விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று (2021, மே 08) அறிவித்துள்ளது.

Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே

இந்த திட்டத்தின் கீழ், முதல் கட்ட நடவடிக்கை இந்த மாத இறுதியில் தெலுங்கானாவில் நடத்தப்படும்.  
தடுப்பூசிகளை வழங்குவதற்காக Beyond Visual Line of Sight (BVLOS) ட்ரோன் விமானங்களை பயன்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) மாநில அரசுக்கு நிபந்தனை விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமான அமைப்பு விதிகள், 2021 விதிமுறையில் இருந்து இந்த ட்ரோன் சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது, பயன்பாட்டு அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்குவதற்கு ட்ரோன் வரிசைப்படுத்தல் செயல்முறையை துரிதப்படுத்தும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன.  

Also Read | MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை… 

முன்னதாக, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி கோவிட் -19 தடுப்பூசி விநியோகம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த மாதம் ஐ.சி.எம்.ஆருக்கு (ICMR) நிபந்தனை விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த அனுமதிகளை வழங்குவது குடிமக்களுக்கு அவர்களின் இடத்திலேயே அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது என்று அரசு கூறுகிறது.

விரைவான தடுப்பூசி விநியோகம் மற்றும் மேம்பட்ட சுகாதார அணுகல் என அரசின் இரட்டை இலக்குகளை அடைவதற்கும், வான்வழி விநியோகத்தின் மூலம் கோவிட் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சுகாதார வசதிகள் கொண்டு சேர்க்கப்படும். 

நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிப்பவர்களுக்கும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும், தொலைதூரப் பகுதிகளில், மருத்துவ வசதிகளை கொண்டு சென்று தேசிய நீரோட்டத்துடன் இணைந்து செயல்படவும் இந்த முன்முயற்சிகள் உதவும்.

 Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News