தர்பூசணி பழம் பலருக்கும் பிடித்தமான ஒன்று. கோடை காலம் வந்தால் போதும் அனைவரது எண்ணமும், கண்களும் தர்பூசணி பழத்தை நோக்கித்தான் போகும். நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி கோடை கால நிவாரணியாக இருக்கிறது.
தர்பூசணி பழம், ஜூஸ் என எந்த வகையில் அதை சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையை மட்டுமே கொடுக்கக்கூடியது. அதேபோல் அந்தப் பழத்தின் விதைகளும் ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கக்கூடியது. அந்த விதைகளை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் அவைகளை அரைத்தோ,வறுத்தோ சாப்பிடலாம்.
காயங்களுக்கு மருந்து:
தர்பூசணி விதையில் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நைட்ரிக் ஆக்ஸைடு அளவுகளை அதிகரிக்கும் தன்மை விதைகளுக்கு உண்டு. இதன் காரணமாக காயங்களை இவை உடனடியாக குணமாக்கும்.
இதய பாதுகாப்புக்கு:
தமனிகளில் கொழுப்புகள் அதிகமாக சேரும்போது மாரடைப்பு போன்ற அபாயங்கள் உருவாகும். இதனைத் தடுப்பதற்கு தர்ப்பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
அந்த விதைகளில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கொலஸ்ட்ரால் அல்லது ரத்த ஓட்டத்தில் மோசமான கொழுப்பு அளவைக் குறைக்கின்றன.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அளிக்கின்றன:
தர்பூசணி விதைகள் குளோபுலின் மற்றும் அல்புமின் புரதங்களை கொண்டுள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
ரத்த அழுத்தம்:
உயர் ரத்த அழுத்த பிரச்னை பலருக்கு இருக்கிறது. அதனையும் தர்பூசணி விதைகள் தடுக்கின்றன.அந்த விதையில் இடம்பெற்றிருக்கும் மெக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க | Skin Care Tips: வறண்ட சருமத்தை அழகாக மாற்ற இதை பயன்படுத்தவும்
அதேபோல் ரத்த ஓட்டத்தில் திரவ அளவுகளையும் சீராக பராமரிக்க உறுதுணையாக இருக்கும். தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களும் உள்ளன. அவை வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கும், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் மற்றும் அமினோ அமிலங்களின் செயல்பாட்டுக்கும் அவசியமானவை.
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் கொடுப்பதால் இனியாவது தர்பூசணி விதைகளை குப்பைத்தொட்டியில் வீசாமல் வாய்க்குள் வீசி ஆரோக்கியமாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR