பிறந்த குழந்தையின் தண்டுவடத்திலிருந்து கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை

Last Updated : Apr 11, 2017, 01:43 PM IST
பிறந்த குழந்தையின் தண்டுவடத்திலிருந்து கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை title=

பிறந்த குழந்தையின் தண்டுவடத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தானத்தின் மனைவி ரேகா. இந்நிலையில் ரேகா வயிற்றில் வளர்ந்த குழந்தையுடன் கட்டி ஒன்றும் வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கருவை கலைக்க முடியாத சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.5 கிலோ எடையுடன், 250 மி.லி ரத்தத்துடன் காணப்பட்டது. குழந்தையின் எடை 6 கிலோவாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற சூழலில், கட்டி வாரத்திற்கு 2செ.மீ அளவிற்கு வளரத் தொடங்கியது.

இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. சரியாக 7 நாட்கள் கழித்து, அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆபத்தான அறுவை சிகிச்சையை மிகவும் கவனத்துடன் மருத்துவர்கள் மேற்கொண்டனர். இறுதியில் 300 கிராம் எடையுள்ள கட்டியை, குழந்தையின் முதுகுத் தண்டில் இருந்து வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர். 

Trending News