நரம்புகளை முறுக்கேற்றும் வாழைப்பழம் - சாப்பிடும் மந்திரம்

சோர்வாக இருக்கும்போது வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் நரம்புகள் முறுக்கேறும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:36 AM IST
நரம்புகளை முறுக்கேற்றும் வாழைப்பழம் - சாப்பிடும் மந்திரம்  title=

நீங்களும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் உங்கள் உடம்பில் ஆற்றல் குறைகிறது என்று அர்த்தம். ஆற்றலை அதிகரிக்க, சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இதனால் நீங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குறிப்பாக, வேலை செய்யும் போது பல சமயங்களில் சோர்வடைந்து விடுவதால், உடலுக்குள் ஆற்றல் குறைவதை உணர்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால், உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது, இந்த ஆற்றல் இழப்பை தவிர்க்கலாம். அந்தவகையில் வாழ்ப்பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். 

உணவில் மாற்றம் 

உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஆற்றல் பற்றாக்குறையைப் போக்க, உடனடி ஆற்றலைத் தரும் பல வகையான பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியம். வாழைப்பழத்தை உணவில் நாள்தோறும் சாப்பிட்டு வருவது சிறந்தது. காலை உணவின்போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க | கோடையில் பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்? ஜூஸாக குடிக்கலாமா?

சோர்வை தவிர்க்க

உடலின் போதுமான ஆற்றல் இல்லாதபோது உடலில் பலவீனம், சோம்பல் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். எந்தவேலையிலும் நீங்கள் ஈடுபட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் குறைந்தது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வாழைப்பழம் தவிர பிரவுன் ரைஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

காபி 

உடனடி ஆற்றலைப் பெற காபியின் உதவியையும் எடுத்துக் கொள்ளலாம். காபி மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். காபி ஒரு நல்ல ஆற்றல் மூலமாகக் கருதப்படுகிறது. சோர்வு, தூக்கமின்மை மற்றும் ஆற்றல் பற்றாக்குறை ஆகியவற்றை காபி உட்கொள்வதன் மூலம் உடனடியாக சமாளிக்கலாம்.

மேலும் படிக்க |  Spine Health: முதுகெலும்பை வலுவாக்கும் ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்!

உருளைக்கிழங்கு 

மறுபுறம், இனிப்பு உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் ஏற்படும் ஆற்றல் பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News