இன்றைய நவநாகரீக உலகில், காலையில் சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து, பின்னர் மீண்டும் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நமது உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மைக்ரோவேவ் ஓவனை சமைப்பதற்கும் சூடு படுத்துவதற்கும் அதிகமாக பயன்படுத்துவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆபிசில் இருந்து களைத்து போய் வரும் போது, பிரிட்ஜில் காலையில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருப்பதை மறுக்க முடியாது.
ஒருமுறை சூடுபடுத்திய உணவை மீண்டும் சூடுபடுத்துவதே தவறு என்னும் நிலையில், அதனை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிகின்றனர். மைக்ரோவேவ் ஓவன்கள், எலக்ட்ரோமேக்னடிக் கதிரியக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிலையில், அதில் சமைக்கப்படும் உணவுகள், அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுகின்றன.
உணவுகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால், அதில் பைஸ்பினால் என்ற நச்சுப்பொருள் உருவாகிறது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அதீத வெப்பமானது, உணவில் உள்ள சத்துக்களை ஒழுங்கற்று பிரிக்கின்றது. இதனால், உணவுகளின் முழு பலன்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன.
மேலும், உணவு வகைகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால், அதில் பைஸ்பினால் என்ற நச்சுப்பொருள் உருவாகிறது. இது, பல்வேறு வகை புற்றுநோய்களை ஏற்படுத்துவததாக கூறப்படுகிறது. இந்த நச்சுப் பொருள், மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள், அதிகளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்ச்சத்து இழப்பிற்கு அது ஈடாக அமையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ