இஞ்சியின் ஐந்து சுகாதார நலன்கள்

Last Updated : Dec 28, 2016, 03:30 PM IST
இஞ்சியின் ஐந்து சுகாதார நலன்கள் title=

இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. வயிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

இஞ்சி, உணவின் ருசி கருதி  உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட.

இஞ்சி ஐந்து சுகாதார நலன்கள் என்னென்ன பார்போம்:-

இஞ்சி வாய்வு பிரச்சனைகளுக்கு சிறப்பான நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள கார்மினேடிவ் வயிற்றில் உள்ள வாய்வை அகற்றும். இஞ்சியில் உள்ள ஸ்பாஸோமைட்டிக் ஜீரணகுழாயை ஆசுவாசப்படுத்தி, ரிலாக்ஸ் செய்யும்.

கர்ப்பிணிகள் சிலருக்கு இடைவிடாத தலைசுற்றல், வாந்தி வரும். இது வராமல் தடுக்க தினமும் இஞ்சி எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து குணமாகும்.

குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் தினமும் சிறுதுண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று தின்ற வேண்டும். 

Trending News