என்ன செஞ்சாலும் உடல் பருமன் குறையலையா... ‘இந்த’ 10 கட்டளைகளை ஃபாலோ பண்ணுங்க!

உடலை ஆரோக்கியமாக பிட் ஆக வைக்க நினைக்கும் பலர், எடை இழப்பு டயட்களை அதிகம் பாலோ செய்கின்றனர். உடல் பருமனை குறைக்கும் உணவுகள், கலோரி குறைவாக உள்ள உணவுகள் என பல விதமான டயட்களை கடைபிடிக்கின்றனர். ஆயினும் கூட, எடை இழப்பு முயற்சிகள் பலனளிப்பதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2023, 05:34 PM IST
  • வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலமே திருப்தியை பெற முடியும்.
  • நீண்ட காலத்திற்கு, கட்டுப்பாடுகள் நிறைந்த உணவு முறை எடை இழப்புக்கு உதவாது.
  • தூக்கமின்மை உங்கள் திருப்தி ஹார்மோனான லெப்டின் வீழ்ச்சியடையச் செய்கிறது.
என்ன செஞ்சாலும் உடல் பருமன் குறையலையா... ‘இந்த’ 10 கட்டளைகளை ஃபாலோ பண்ணுங்க! title=

உடல் நலப் பிரச்சினைகளுக்கு உடல் பருமன் தான் மூல காரணமாக உள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் முதல் நிபுணர்கள் வரை அனைவரும் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, மாரடைப்பு என்பது முதியவர்களை மட்டுமல்ல இளைஞர்கள் உயிரை அதிகம் பறிக்கும் எமனாக மாறியுள்ளது. உடல் பருமனால், மாரடைப்பு அபாயம் அதிகரிப்பதோடு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி, கல்லீரல் பிரச்சனை போன்ற பல உடல நல பிரச்சனைகள் உண்டாகின்றன. 

உடலை ஆரோக்கியமாக பிட் ஆக வைக்க நினைக்கும் பலர், எடை இழப்பு டயட்களை அதிகம் பாலோ செய்கின்றனர். எடை இழப்பு டயட், உடல் பருமனை குறைக்கும் உணவுகள், கலோரி குறைவாக உள்ள உணவுகள் என பல விதமான டயட்களை கடைபிடிக்கின்றனர். ஆயினும்கூட, எடை இழப்பு முயற்சிகள் பலனளிப்பதில்லை. காரணம் அவை பசி உணர்வை போக்குவதில்லை அல்லது வயிறு நிறைந்த உணர்வை தருவதில்லை. இந்நிலையில், உடற்பயிற்சி மற்றும் குறைந்த கலோரி உண்பதை தவிர, உங்கள் எடை இழப்பை அதிகரிக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இவற்றை கடைபிடித்தால் உடல் பருமனை குறைப்பது எளிதாகும்.

உங்கள் உடல் எடையை குறைக்க  கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

1.  மெதுவாக சாப்பிடுங்கள்
உடல் பருமனை குறைக்க விரும்பினால், முதலில் அவசரமாக சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். உங்கள் மூளை உங்கள் வயிறூ நிரம்பிவிட்டது, சாப்பிடுவது போது என கட்டளையிட சிறிது நேரம் எடுக்கும். ஆனால், நீங்கள் விரைவாக சாப்பிட்டால், உங்கள் மூளை திசை திருப்பப்படலாம். வயிறு நிறைந்து விட்டது என்பது குறித்து மூளை இடும் கட்டளையை நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். இது அதிகப்படியான உணவை உண்ண வழிவகுக்கும். மேலும் மெதுவாக உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால், உமிழ்நீர் உணவுடன் நன்றாக கலந்து வளர்சிதை மாற்றல் அதிகரிக்கும்.

2.  உணவைத் தவிர்க்காதீர்கள்

உணவைத் தவறவிட்டால் உடல் எடை குறையும் என்ற கருத்து பரவலாக உள்ளது. உணவை தவிர்ப்பதால் குறைந்த கலோரிகளை சாப்பிடுகிறீர்கள் என்றாலும், உணவைத் தவிர்ப்பது பொதுவாக அதிகப்படியான பசி மற்றும் அதிக அளவிலான உணவு உண்ணவே வழி வகுக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதித்து உடல் எடை பெருகும். எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளுங்கள்.

3. உலர் பழங்கள்/ நட்ஸ் 

உலர் பழங்கள் மற்றும்  நட்ஸ், கார்போஹைட்ரேட் அடிப்படையிலான தின்பண்டங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். இது நிச்சயம் எடையைக் குறைக்க உதவுகிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க  உதவும் அமினோ அமிலங்கள் இதில் உள்ளதால், உடற்பயிற்சிக்கு முன் பாதாம் பருப்புகளை உட்கொண்டால் நன்மை பயக்கும்.

4. சரியான தூக்கம் 

தூக்கமின்மை உங்கள் திருப்தி ஹார்மோனான லெப்டின் வீழ்ச்சியடையச் செய்கிறது. இதனால் உங்கள் பசியை தூண்டும் ஹார்மோனான கிரெலின் உயரும். இதனால், அதிகம் சாப்பிடும் நிலை உண்டாகும். இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். தூக்கம் இல்லாமல் இருக்கும்போது உப்பு மற்றும் இனிப்பு உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.

5. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் , வயிறு நிறைந்த உணர்வை பெற உதவும். இது எடை இழப்புக்கு ஏற்றது. பழங்கள் மற்றும் காய்கறிகள், ஓட்ஸ், முழு தானிய ரொட்டி, பழுப்பு அரிசி, பாஸ்தா, பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு உள்ளிட்ட தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளில்  நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இவை உடல் கழிவுகளை அகற்றி கொழுப்பை கரைப்பதால் உடல் பருமன் குறையும்.

6. உணவு பொருட்கள் மீதான  லேபிள்களைப் படிக்கவும்

உணவு பொருட்கள் மீதுள்ள லேபிள்களை பலர் படிப்பதில்லை. அதன் மீது அதில் உள்ள ஊட்டசத்துக்கள் கலோரிகள் குறித்த தகவல்கள் இருக்கும். அதனை படித்து அறிந்து கொள்வதால், ஆரோக்கியமான தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். எடை இழப்புத் திட்டத்தில் உங்கள் தினசரி கலோரி ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட உணவு எவ்வாறு பொருந்துகிறது என்பதைத் தீர்மானிக்க, கலோரி எண்ணிக்கையைப் பயன்படுத்தவும்.

7. சிறிய தட்டை பயன்படுத்தவும்

நீங்கள் எந்த  உணவை சாப்பிட்டாலும், அது சிற்றுண்டியாக இருந்தாலும் சரி அல்லது சாப்பாடாக இருந்தாலும் சரி, சிறிய தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவது உங்கள் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் ஒரு எளிய முறையாகும். உணவுகளில் நார்ச்சத்து, புரதம் போன்றவற்றை நிரப்பினால் உடல் எடையை குறைக்கும் முயற்சி எளிதாகும்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை 15 நாட்களில் கரைக்கும் ‘கடுக்காய்’! பயன்படுத்தும் சரியான முறை!

8. வீட்டில் சமைக்கவும்

அனைத்து நுண்ணூட்ட சத்துக்கலும் நிறைந்த ஒரு முழுமையான சீரான அளவில் உள்ள உணவு, உடலின் தினசரி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஒரு ஆய்வின் படி, உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் சாப்பிடும்போது, உங்கள் உடலுக்கு திருபதியான உணர்வை தந்து, பசி எடுக்காமல் இருக்கச் செய்கிறது. இதனால், தேவையற்ற உணவுகளை சாப்பிடுவது வெகுவாக குறையும். இது வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலமே திருப்தியை பெற முடியும்

9. கட்டுப்பாடான உணவு முறைகளை தவிர்க்கவும்

நீண்ட காலத்திற்கு, கட்டுப்பாடுகள் நிறைந்த உணவு முறை  எடை இழப்புக்கு உதவாது. கார்போ ஹைட்ரேட் இல்லாத உணவுகள் , டிடாக்ஸ், ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் டயட்  உணவுகள் உட்பட நிலையான அல்லது நீண்டகால தீர்வு இல்லாத ஃபேட் உணவுகள் உள்ளன. aதெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் விரும்பியதை மிதமாக சாப்பிடுங்கள் மற்றும் கூடுதல் கலோரிகளை எரிக்க, வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

10. ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணுங்கள்

உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நட்ஸ்கள் ஆரோக்கியமான கொழுப்புகளின் அற்புதமான மூலமாகும் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. சாக்லேட் அல்லது பிரவுனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பாதாம் பருப்பை சிற்றுண்டியாக சாப்பிட முயற்சிக்கவும்.

பொறுப்பு துறப்பு: ஆலோசனைகள் உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE News பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News