Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்

கொடை மிளகாயை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. இது பல நோய்களுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகவும் இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2020, 06:47 PM IST
  • முடி வளர்ச்சிக்கு கொடை மிளகாய் மிகவும் உதவியாக இருக்கும்.
  • கொடை மிளகாய் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கொடை மிளகாய் அதிக அளவில் உதவுகிறது.
Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய் title=

புதுடெல்லி: கேப்சிகம் அதாவது கொடை மிளகாய் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு காய் வகையாகும். கொடை மிளகாயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொடை மிளகாய் பல நோய்களுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகவும் இருக்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. கொடை மிளகாயை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம்.

கண்கள் மற்றும் தோலுக்கு உகந்தது

கொடை மிளகாயை (Capsicum) உட்கொள்வது சருமத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கிறது. கொடை மிளகாயில் வைட்டமின் ஏ (Vitamin A) உள்ளது. இது கண்களுக்கு நல்லது. கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது.

இதயத்திற்கு நன்மை பயக்கும்

கொடை மிளகாயில் உள்ள லைகோபீன் என்ற பைட்டோநியூட்ரியண்ட் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றின் மூலமாகும். இது ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய நோய்களுக்கான அபாயமும் குறைகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

கொடை மிளகாயை சாப்பிடுவது கொழுப்பை போக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும். இதனுடன் நமது செரிமானமும் மேம்படும்.

ALSO READ: பாதம் வெடிப்பு நீங்க சில இயற்கை வழி டிப்ஸ்!

முடியை அழகாக வைத்திருக்க உதவுகிறது

முடி வளர்ச்சிக்கு கொடை மிளகாய் மிகவும் உதவியாக இருக்கும். இது முடி உதிர்வதைத் (Hair Loss) தடுக்கிறது மற்றும் அடர்த்தியான முடியை பராமரிக்க உதவுகிறது.

புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது

கொடை மிளகாய் புற்றுநோயின் (Cancer) அபாயத்தை குறைக்கிறது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இதை உட்கொண்டால், புற்றுநோய் செல்கள் உடலில் உருவாக முடியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் கொடை மிளகாயை உட்கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்த கொடை மிளகாய் அதிக அளவில் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, மூளையை கூர்மையாக்குவதிலும் கொடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

ALSO READ: கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News