இந்த டீடாக்ஸ் போதும்; உங்க முடி கொட்டுறது நிற்கும்

Hair Detox: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக சில வழிமுறைகள் குறிந்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 3, 2022, 02:10 PM IST
  • ஆரோக்கியமான தலைமுடிக்கான டிப்ஸ்
  • தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்
இந்த டீடாக்ஸ் போதும்; உங்க முடி கொட்டுறது நிற்கும் title=

தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்: கூந்தலின் அழகுக்காக நாம் என்னென்னவோ செய்கிறோம். ஆனால் உடலைப் போலவே கூந்தலுக்கும் டீடாக்ஸ்  தேவை என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம்., ஆரோக்கியமான கூந்தலுக்கும் டீடாக்ஸ் அவசியம். வழக்கமாக சில பெண்கள் முடி உதிர்தல், வறண்ட முடி அல்லது பொடுகு போன்றவற்றைப் புகார் செய்கின்றனர். அப்படிபட்ட சூழ்நிலையில் ஹேர் டீடாக்ஸ் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் நாம் சமாளிக்கலாம். எனவே ஹேர் டீடாக்ஸ் மூலம் முடியை எப்படி அடர்த்தியாகுவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

முடி அரிப்பு ஏன்?
உண்மையில், நாம் தினமும் நம் தலைமுடியைக் கழுவுகிறோம். அதன் பிறகும் தலையில் அழுக்கு, எண்ணெய், வியர்வை ஒட்டிக் கொள்கிறது. இது பின்னர் நம் முடியை மேலும் எண்ணெய் மிக்கதாக மாற்றுகிறது. இதனால் தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, உச்சந்தலையில் நச்சு நீக்கம் செய்வது மிகவும் அவசியம். இது உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்வதன் மூலம் முடி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

முடி டீடாக்ஸ் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஊடக அறிக்கைகளின்படி, முடி உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்யும் செயல்முறை ஹேர் டீடாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதைச் செய்வதற்கான வழி என்னவென்றால், தலைமுடியில் ஷாம்பு மற்றும் ஸ்கால்ப் ஸ்க்ரப் உதவியுடன், முடியை ஆழமாக சுத்தம் செய்யலாம். இது தவிர, ஸ்டைலிங் கருவிகளால் முடி சேதமடைவதையும் தடுக்கிறது. 

வெள்ளரிக்காய் எலுமிச்சை ஷாம்பு பயன் தரும்
வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் சிலிக்கா, காரப்பொருள், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் கூந்தலுக்கு மிகவும் சத்து கொடுக்க கூடியவை. இயற்கையான அமிலத்தன்மை நிறைந்த எலுமிச்சை சாறு உச்சந்தலையின் பி.ஹெச் அளவை சமன்படுத்துகிறது. இது முடி ஆரோக்கியத்துக்கு நன்மைகளையும் வழங்குகிறது.

முதலில் வெள்ளரிக்காயை தோல் நீக்கி நறுக்கி நன்றாக மசிக்கவும் அதன் சாறை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இரண்டும் சம அளவு இருக்க வேண்டும். பிறகு ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். அத்தியாவசிய எண்னெய் சேர்த்து மீண்டும் கலந்து பாட்டிலில் ஊற்றி நன்றாக கலந்து எடுக்கவும். இதை விரல்களால் தொட்டு கூந்தல் முழுக்க மசாஜ் செய்து அப்படியே 20 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் கூந்தலை வெதுவெதுப்பான நீரில் அலசி எடுக்கவும்.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News