Memory Loss: சில உணவு பொருட்கள் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதோடு, நினைவாற்றலையும் பலவீனப்படுத்தி, மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, நமது மன ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் நினைவாற்றல் பலவீனமடைந்து, சிறிய விஷயங்களைக்கூட மறந்து விடுகிறோம். சிலருக்கு முந்தைய நாள் என்ன நடந்தது என்பதை கூட ஞாபகபடுத்தி பார்க்கும் அளவுக்கு மறந்து போகிறார்கள். சில உணவுகள் நினைவாற்றலை மிகவும் பலவீனமாக்குகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரியவர்கள் மட்டுமல்லாது, இந்த உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளுக்கும், நினைவாற்றல் குறைவதோடு, மூளை வளர்ச்சியும் பாதிக்கிறது. உங்கள் மனதையும் குழந்தைகளின் மூளையை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால், இந்த 4 விஷயங்களை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!
நினைவாற்றலைக் குறைக்கும் உணவுகள்:
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா நினைவாற்றலை பாதிக்கும் ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார். இந்த உணவுகளை நிச்சயம் தைர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
1. குளிர்பானங்கள் மற்றும் டயட் சோடா
சிலர் தாகம் எடுக்கும்போது குளிர்பானங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் அது உங்கள் நினைவாற்றலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், குளிர்பானங்களில் காணப்படும் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப், மூளை வீக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நினைவாற்றலையும் கற்றல் திறனையும் குறைக்கிறது. மேலும், மூளை மற்றும் நினைவாற்றலை பலவீனப்படுத்தும் கூறுகள் டயட் சோடாவில் காணப்படுகின்றன.
2. பேக் செய்யப்பட்ட உணவு
பசிக்கும்போது பேக் செய்யப்பட்ட சிப்ஸ் போன்றவற்றை கொரிக்கும் எண்ணம் அனைவரின் மனதிலும் நிச்சயம் தோன்றும். குழந்தைகளும் அதை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் இந்த உணவில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு மூளையின் வலர்ச்சியை குறைப்பதோடு, நினைவாற்றலை பலவீனமாக்குகிறது. பெரியவர்களுக்கு அல்சைமர் நோய் (கடுமையான மறதி நோய்) அபாயத்தை இது அதிகரிக்கிறது.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
3. இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவு ((Junk and Fast Food)
குழந்தைகள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவை உட்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இது மூளையின் Brain Derived Neurotrophic Factor (BDNF) உற்பத்தியைக் குறைக்கும். இதன் காரணமாக நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் குறையும்,. இந்த உணவுகள் புதிய நியூரான்கள் உற்பத்தி ஆவதை தடுக்கிறது.
4. மது
நீங்கள் தினசரி மது அருந்தினாலும் அல்லது எப்போதாவது மது அருந்தினாலும், அது உடலில் இருந்து வைட்டமின் பி 1 ஊட்டசத்தை நீக்குகிறது. இதன் காரணமாக ஞாபக சக்தி குறைந்து நரம்பியக்கடத்தியில் சேதம் தொடங்குகிறது. இந்த காரணங்களால், உங்கள் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR