இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 16 முதல் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் என்பதை பிரதமர் மோடி (PM Narendra Modi) அறிவித்தார்.
இதற்காக நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட தடுப்பூசி போடும் பணியில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கும், பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படும்.
இந்நிலையில், மக்களுக்கு மேலும் நிம்மதி அளிக்கும் வகையில், மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவிற்கு (India) கிடைக்கும் என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் (Covaxin) ஆகியவற்றின் அவசர பயன்பாட்டிற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. இருப்பினும், மிக விரைவில் சைடஸ் காடிலா (Zydus Cadila), ஸ்பூட்னிக் வி (Zydus Cadila), பயோலஜிகல் (Biological Evan) இ மற்றும் ஜெனோவா (Gennova )ஆகிய தடுப்பூசிகள் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் இன்று அறிவித்தார்.
முதல் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை, மத்திய அரசே ஏற்கும் எனவும் பிரதமர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR