COVID-19 நோயாளிகளுக்கான சிகிச்சையில் Favivir என்னும் மாத்திரை பலனளிக்குமா..!!!

ஹைதராபத்தில், லேசான அல்லது மிதமான அறிகுறிகள் உள்ள COVID-19  நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்க Favivir மருந்து  பயன்பாடு தொடங்கப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 07:48 PM IST
  • ஃபாவிவிர் மதிமான மற்றும் மிதமான அறிகுறிகள் உள்ள COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
  • இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மருந்து தயாரிப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
COVID-19  நோயாளிகளுக்கான  சிகிச்சையில் Favivir என்னும் மாத்திரை பலனளிக்குமா..!!! title=

ஹைதராபத்தில், லேசான அல்லது மிதமான அறிகுறிகள் கொண்ட கொரோனா  நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்க Favivir மருந்து  பயன்பாடு தொடங்கப்பட்டது

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமும் உலகின் மிகப்பெரிய ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஹெட்டெரோ (Hetero), புதன்கிழமை இந்தியாவில் ஜென்ரிக் மருந்தான ஃபாவிபிராவிர்  என்ற மருந்தை ஃபாவிவிர் என்ற பெயரில் லேசான மற்றும் மிதமான  அறிகுறிகள் உள்ள COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக   அறிமுகப்படுத்தியுள்ளது.

ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!

ஹெட்டெரோவின் ஃபாவிவிர் (Favipiravir 200 mg)  மாத்திரை ஒன்றின் விலை ரூ .59 விலை  ஆகும். இந்த தயாரிப்பு புதன்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை மருத்துவ விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை மருந்தகங்களில் கிடைக்கும். இது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கபடும், மேலும் அவை மருந்துகளில் மட்டுமே விற்கப்படும்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மருந்து தயாரிப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

COVID சிகிச்சையில் பயன்படுத்தப்படும் Covifor (Remdesivir) ஆகிய மருந்துகளுக்கு பிறகு ஹெட்டெரோ உருவாக்கிய இரண்டாவது மருந்து ஃபாவிவிர் ஆகும்.

ALSO READ | கூரான கத்தியை விழுங்கிய நபர்… சவாலான அறுவை சிகிச்சை செய்த AIIMS மருத்துவர்கள்

ஃபாவிவிர்  மதிமான மற்றும் மிதமான அறிகுறிகள் உள்ள  COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மருந்து இந்தியாவில் உள்ள ஹெட்டெரோவின் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு  நிலையத்தில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு USFDA மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற  உலகளாவிய ஒழுங்குமுறை ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Trending News