)
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதற்கு நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டும். உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிது. ஆனால் இதை குறைக்க பல வித நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நம் உணவிலேயே பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் தினமும் உட்கொள்ளும் உணவைக் கொண்டே நமது உடல் எடையை குறைக்கலாம் என கூறினால் பலரால் நம்ப முடியாது. ஆனால் இது உண்மை. இயற்கையான வழியில் உடல் எடையைகுறைக்க உதவும் ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நமது சமையலில் பல வித உணவுகளில் பயன்படும் சீரகம் நம் தொப்பை கொழுப்பை குறைத்து (Belly Fat), உடல் எடையையும் குறைக்கும். நம் சமையலறையின் ஒரு அத்தியாவசியமான அங்கமான சீரகம் பல வகையான உணவுகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படும் மசாலாப் பொருளாகும். சீரகத்தின் லத்தீன் பெயர் Cuminum cyminum. சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வயிறு தொடர்பான பல வகையான பிரச்சனைகளை நீக்க சீரகம் உதவுகிறது. சீரகத்தில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் சீரகத்தில் அதிகம் காணப்படுகின்றன.
சீரகம் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக உள்ளது. ஆகையால் உடல் எடையை குறைக்க (Weight Loss) விரும்புபவர்களுக்கு சீரகம் மிக உதவியாக இருக்கும். சீரக தேநீர் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கலோரிகளை எரித்து, கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. சீரக டீ உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த பானமாக கருதப்படுகின்றது.
சீரக டீ தயாரிக்கும் செயல்முறை
சீரக டீயை உட்கொள்வதன் மூலம் உங்கள் அதிகரித்த எடையை உடனே குறைக்கலாம். சீரக தேநீர் தயாரிக்க, முதலில் ஒரு கடாயில் சீரகத்தை சுமார் 5-6 விநாடிகள் சூடாக்கவும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அடுப்பை அணைத்து பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, 3-5 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு இதை ஒரு கிளாசில் வடிகட்டி விடவும். இதில் லேசான கசப்பு சுவை இருக்கும். அதை குறைக்க நினைப்பவர்கள் இதில் சிறிது தேன் சேர்க்கலாம். இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். இதை குடிப்பதன் மூலம் சில நாட்களில் உடல் எடை குறையத் தொடங்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ