Ajinkya Rahane: ஐபிஎல் 2025 ஏலம் கடந்த மாதம் முடிவடைந்தது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் பல முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மெகா ஏலத்தில் மீண்டும் எடுக்க முடியவில்லை. அதில் ஒருவர் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. சிஎஸ்கே அணியில் ரஹானேவிற்கு சிறப்பு மரியாதை இருந்தது. கடந்த ஐபிஎல் 2023 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சிறப்பாக ஆட்டத்தை தொடர்ந்து பிளேயிங் 11ல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினார்.
மேலும் படிக்க | IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்!
இருப்பினும், 2024 சீசனில் ரஹானேவின் ஃபார்ம் மோசமாக இருந்தது. பல போட்டிகளில் சிஎஸ்கே இவரை நம்பி இருந்த நிலையில் பேட்டிங்கில் ஏமாற்றினார். சில போட்டிகளில் ஓப்பனிங் வீரராகவும் களமிறக்கப்பட்ட ரஹானே ரன்கள் அடிக்கவில்லை. தனது நேர்த்தியான ஸ்ட்ரோக் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ரஹானே, ரன்கள் அடிக்கவே சிரமப்பட்டார். கடந்த சீசனில் சென்னை அணியின் மோசமான ஆட்டத்திற்கு இவரும் ஒரு காரணம். இதனால் ஏலத்தில் சென்னை அணி இவரை மீண்டும் எடுக்கவில்லை. கடைசியாக கொல்கத்தா அணி ரஹானேவை ஏலத்தில் எடுத்தது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார் ரஹானே.
Petition to change the definition of 'consistency' to Ajinkya Rahane! #SMAT2024 pic.twitter.com/gxrPWM5SLO
— KolkataKnightRiders (@KKRiders) December 11, 2024
சையத் முஷ்டாக் அலி தொடரில் ரஹானே
2024 சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் அஜிங்க்யா ரஹானே. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் இவர் இதுவரை 4 அரை சதங்களை அடித்துள்ளார். லேயும் ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக உள்ளது. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விதர்பாவுக்கு எதிராக 45 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் அடித்தார். அதற்கு முன்பு, கடைசி குரூப் போட்டியில் ஆந்திராவுக்கு எதிராக 95 ரன்கள் எடுத்தார். மேலும் மகாராஷ்டிராவுக்கு எதிராக 34 பந்துகளில் 52 ரன்களும், கேரளாவுக்கு எதிராக 35 பந்துகளில் 68 ரன்களும் விளாசி சிறப்பான பார்மில் உள்ளார்.
இந்நிலையில், ரஹானேவின் இந்த சிறப்பான பார்ம் சென்னை அணியின் தேர்வாளர்களையும், ரசிகர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டிராபியில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 56 சராசரியில் 168 ஸ்டிரைக் ரேட்டில் 334 ரன்கள் அடித்துள்ளார் ரஹானே. ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ளார் ரஹானே. இவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அணி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தனது 36வது வயதில் டி20 கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளார் ரஹானே.
மேலும் படிக்க | நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் இவரை சேர்த்தால்... இந்திய அணி பலமாகும் - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ