Weight Loss Tips: உடல் எடை குறைய வேண்டுமா? தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த கேள்வியை கேட்டால், நம்மில் பலரது பதில் ஆம் என்றுதான் இருக்கும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுமுறையும் சரியான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமனை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. பலர் இதற்காக ஜிம் செல்கிறார்கள், பலவித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைவராலும் இவற்றையெல்லாம் செய்ய முடியாது.
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க பல வித வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அதில் ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமனை குறைக்க பல காய்கள் நமக்கு உதவியாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுரைக்காய். எடை இழப்புக்கு சுரைக்காய் சாறு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சுரைக்காய் சாறு எடையைக் குறைப்பதிலும், கலோரிகளை எரிப்பதிலும் ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதில் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. சுரைக்காயின் நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைக்க அதை எவ்வாறு உட்கொள்கிறோம் என்பது பற்றியும் இங்கே காணலாம்.
எடை இழப்புக்கு சுரைக்காய் சாறு (Bottle Gourd Juice For Weight Loss)
அதிக ஊட்டச்சத்து
சுரைக்காய் சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது உடலின் போஷாக்கிற்கான தேவைகளை பூர்த்தி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடலில் ஏற்படும் சோர்வும் குறைகின்றது.
மேலும் படிக்க | தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!
குறைந்த அளவு கலோரி
சுரைக்காய் சாற்றில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உணவுக்குப் பிறகு ஏற்படும் உப்பசத்தை தவிர்க்கிறது. இதை குடிப்பதால் வயிற்றுக்கு நிறைவான உணர்வு ஏற்படுகின்றது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
செரிமானத்தை துரிதப்படுத்துகிறது
சுரைக்காய் சாறு செரிமான செயல்முறையை சீர்செய்ய உதவுகிறது. இதன் காரணமாக நாம் உட்கொள்ளும் உணவு மிக விரைவாகவும் சரியான முறையிலும் ஜீரணமாகிறது. இது உங்கள் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இதை காலையில் தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
சுரைக்காய் சாறு செய்வது எப்படி?
ஒரு நடுத்தர அளவிலான சுரைக்காயைக் கழுவி, தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய துண்டுகளை மிக்ஸி அல்லது பிளெண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் இதை வடிகட்டி சுரைக்காய் சாற்றை குடிக்கவும். சுரைகாய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதில் கொத்தமல்லி சேர்த்து அல்லது எலுமிச்சை பழம் பிழிந்தும் குடிக்கலாம். இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை சர்ரென இறங்க..‘இந்த’ நேரத்தில் உடற்பயிற்சி செய்து பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ