உடல் எடையை குறைப்பதற்கு, ஜிம்மிற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பது அவசியம் இல்லை. இது, கலோரி டெஃபிசிட் மற்றும் உடற்பயிற்சியை பொறுத்து அமைகிறது. உடல் எடையை குறைப்பதற்கு விடாமுயற்சியுடன் உழைத்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். உடற்பயிற்சி கூடத்திற்கு போகாமல் உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
உட்டச்சத்து உணவுகள்:
உங்கள் தட்டை, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களால் நிரப்ப வேண்டும். இதனால், ஹெல்தி கொழுப்புகள் உடலில் அதிகரிக்கும். இப்படி புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவும். சர்க்கரை, இனிப்பு சேர்த்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகள், கெட்ட கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
நீர்ச்சத்து:
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீர்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், உடலில் மெட்டபாலிச சத்தை அதிகரிக்க உதவும். அது மட்டுமன்றி, ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணிர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும். இந்த வெயிலில் அதிகளவில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமன்றி, நீர் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
நல்ல தூக்கம்:
தினமும் 7-9 மணி நேரம் நன்றாக தூங்குவது மிக முக்கியம். நன்றாக தூங்காமல் இருப்பதால், ஹார்மோன் மாறுபாடுகள், எடை அதிகமாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, சரியான தூக்க அட்டவணையை போட்டு சரியாக தூங்க வேண்டும்.
மேலும் படிக்க | உங்களுக்கும் 'இந்த இடங்களில்' வலி இருக்கா... மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!
மன அழுத்தம்:
மன அழுத்தம், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். இதனால் சிலர் அதிகமாக சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவர். எனவே, மன அழுத்தத்தை சரியாக பார்த்துக்கொள்வது அவசியம். மூச்சுப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உங்கள் மன நலனில் அக்கறை கொண்டவர்களுடன் சந்தித்து பேசலாம்.
தினசரி உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வதும் உடல் நலனுக்கு உதவும். முடிந்தளவு, வாக்கிங் செய்வது, ஜாக்கிங் செய்வது, வேகமாக நடைப்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம். தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது வெயிட் லாஸிற்கும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நன்மை பயக்குமாம். அது மட்டுமன்றி, இதனுடன் சேர்த்து ஸ்குவாட்ஸ்,லஞ்சஸ், புஷ் அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு, எந்தவிதமான உடற்பயிற்சி உபகரணங்களும் தேவையில்லை.
உடல் எடையை சரிபார்ப்பது..
நீங்கள் சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டுகளை ஃபாலோ செய்வதால் உங்கள் உடல் எடையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம். எடை மிஷினை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு அதில் வெயிட்டை வாரத்திற்கு ஒரு முறை சரிபார்க்க வேண்டும். இன்ச் டேப் கொண்டு, எடையின் அளவையும் சரிபார்க்க வேண்டும். எடை குறைந்திருந்தால், அதனால் உங்களுக்கு மேலும் முயற்சியில் முன்னேறி செல்ல உந்துதல் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆண்களே 40 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்கணுமா? இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ