பல் சொத்தை பாடாய் படுத்துதா..? இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்..!

பல் சொத்தையால் அவதிப்படுவோர் பலர் அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் இருப்பர். இதை சில வீட்டு வைத்தியங்களை கொண்டே தவிர்க்கலாம். 

Written by - Yuvashree | Last Updated : Sep 3, 2023, 06:59 PM IST
  • பல் சொத்தையால் அவதியா?
  • இதை தவிர்க்க சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
  • அவை என்னென்ன? இங்கே பார்ப்போம்!
பல் சொத்தை பாடாய் படுத்துதா..? இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்..! title=

பல் சொத்தை பிரச்சனையை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இதை சரிசெய்ய முதலில் பல் மருத்துவரை சந்திப்பது முக்கியம். அதே சமயம், அந்த சொத்தை பிற பற்களுக்கு பரவாமலும் அந்த சொத்தை ஆழமாகமல் இருக்கவும் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். 

உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முக்கியம். இதில் மிக மிக முக்கியமாக பார்க்கப்படுவது, பற்கள். நமது உடலின் ஆரோக்கியம் இதில் இருந்தே தொடங்குகிறது. பல் வலி வர பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வலி வந்துவிட்டால் அதை தாங்குவது மிகவும் சிரமம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.  ஒரு பல்லில் சொத்தை ஏற்பட்டால் அது அதிகமாகி பிற பர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி இவை நரம்பு மண்டலம் வரையும் செல்லும். இதை தவிர்க்க சில வீட்டு வைத்திய முறைகளை செய்து பாருங்கள். 

ஓரிகானோ எண்ணெய்:

ஓரிகானோ எண்ணெய் பற்சிதைவை தடுக்கும் சிறந்த கிருமி நாசினியாக பார்க்கப்படுகிறஹ்டு. இது குறித்து சில ஆண்ட்களுக்கு முன்பு ஒரு பிரபல நிறுவனம் மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில், ஓரிகானோவில் சக்திவாந்த ஆன்டி மைக்ரோபியல் என்ற பண்பு இருப்பது கண்டறியப்பட்டது. காட்டன் வைத்து ஓரிகானோ எண்ணெயில் தோய்த்து சொத்தை பற்களின் மேல் வைத்துக்கொள்ளலாம் என சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், 

பற்களில் உள்ள பிஎச் எளவு முக்கியம்:

வாய்ல் பிஎச் அளவு அதிகமாக இருந்தாலும் சொத்தை ஏற்படும். இதை தடுக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும். எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் வேண்டும். இதனால் நம் பற்களில் உள்ள பிஎச் அளவை நடுநிலையாக வைத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | 7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை! கேன்சர் எதிர்ப்பு ஊசி கண்டிபிடித்த NHS

கிராம்பு எண்ணெய்:

பல் வலியை தடுக்க கிராம்பு எண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காட்டன் பாலில் கிராமு எண்ணெயை ஒரு துளி விட்டு அதை பல் சிதைவு அல்லது சொத்தை இருக்கும் இடங்களில் வைக்கலாம். இப்படி செய்தால் பல் வலி குறையும். பல் சொத்தைக்குள் இருக்கும் புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் பற்சிதைவு மற்றும் சொத்தை பிற பற்களுக்கு பரவாமலும் இது பார்த்துக்கொள்கிறது. 

வேம்பு:

பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வேப்பங்குச்சியை கொண்டு தினமும் பல் துலக்கலாம் என சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பல் சிதைவ் அல்லது பற்சொத்தை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் இதை பின்பற்றலாம். இதில் உள்ள சக்தி, வாய்வழியே ஏற்படும் தொற்று மற்றும் பற்களில் இருந்து வரும் ரத்தப்போக்கு, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தீர்க்க உதவும். வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்குவதால் பற்கள் சுத்தமாகும், வெண்மையாக காட்சியளிக்கும். வாய் துர்நாற்றம் நிங்கும். 

கிரீன் டீ:

உடல் எடையை குறைக்க மட்டுமல்ல பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கவும் கிரீன் டீயை பயன்படுத்தலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். இதில், இயற்கையாகவே ஃப்ளூரின் உள்ளது. இதனால் பல் சிதைவை தடுக்கலாம். 

அதிமதுரம்:

பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பொருட்களுள் ஒன்று, அதிமதுர வேர். பற்களில் ஏற்படும் சிதைவை தடுக்க அதிமதுர வேரை மெல்லலாம். இதனால் வாய் மற்றும் பற்களில் பாக்டிரியாக்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம். பற்களில் உண்டாகும் நச்சுத்தன்மையை எதிர்த்து போராடும் தன்மை அதிமதுர வேருக்கு உள்ளது. இதனால் ஈறு சம்மந்தமான நோய் பிரச்சனைகளையும் தடுக்கலாம். 

மேலும் படிக்க | ஆரோக்கியத்தின் பொக்கிஷம் முந்திரிப்பால்! ஒரு கிளாஸ் குடிச்சா நோய்க்கு டாட்டா சொல்லலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News