உங்க Health-த கண்காணிக்கலாம் ரொம்ப easy-யா: IIT-M, Helyxon-ன் புதிய கண்டுபிடிப்பு!!

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட நோயாளிகளின் முக்கிய உடல் ரீதியான அறிகுறிகளை தொலைவிலிருந்து கண்காணிக்கும் ஒரு நவீன சாதனம் சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 12:30 PM IST
  • IIT-M மற்றும் ஹெலிக்சன் என்ற ஸ்டார்ட் அப் ஆகியவை இணைந்து இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளன.
  • உள்ளமைவு மற்றும் அளவுருக்களைப் பொறுத்து, ₹ 2,500 முதல் ₹ 10,000 வரை இதற்கு செலவாகும்.
  • இதன் மூலம் உடல் சீதோஷன அளவு, ஆக்ஸிஜன் செறிவு, சுவாச வீதம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
உங்க Health-த கண்காணிக்கலாம் ரொம்ப easy-யா: IIT-M, Helyxon-ன் புதிய கண்டுபிடிப்பு!! title=

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட நோயாளிகளின் முக்கிய உடல் ரீதியான அறிகுறிகளை தொலைவிலிருந்து கண்காணிக்கும் ஒரு நவீன சாதனம் சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-மெட்ராசின் (IIT-M) உடல் நல புதுமுறை காணல் மையம் மற்றும் ஹெலிக்சன் என்ற ஸ்டார்ட் அப் ஆகியவை இணைந்து இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் உடல் சீதோஷன அளவு (Body Temperature), ஆக்ஸிஜன் செறிவு (Oxygen saturation), சுவாச வீதம் (Respiratory rate) மற்றும் இதய துடிப்பு (Heart rate) ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 2,000 நோயாளிகளுக்கு இந்த சாதனம் பயன்படுத்தப்பட்டு வருவதாக IIT-M தெரிவித்துள்ளது. மேலும் 5,000 சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

உள்ளமைவு மற்றும் அளவுருக்களைப் பொறுத்து, ₹ 2,500 முதல் ₹ 10,000 வரை இதற்கு செலவாகும்.

இந்த தன்னியக்க portable wireless சாதனம் நோயாளியின் விரலில் பொருத்தப்பட்டு, நோயாளியின் உடல் நலத் தரவுகள் மொபைல் போன் அல்லது மத்திய கண்காணிப்பு அமைப்புக்கு அனுப்பப்படுகிறது.

உடல் வெப்பம் அக்குள் பகுதியிலும் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் பிற அளவுருக்களின் விவரம் விரல் நுனியிலும் அளவிடப்படுகின்றன். இந்த மறுபயன்பாட்டு சாதனத்தை நோயாளிகள் மற்ற உடல் நலப் பயன்பாடுகளுக்கும் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படலாம்.

இந்த Covid-19 தொற்று காலத்தில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான நோயாளிகளுடனான நெருங்கிய தொடர்பை குறைப்பதாலும், PPE-க்கு ஆகும் செலவைக் குறைப்பதாலும், மருத்துவமனைகள் இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதை சாதகமாகக் கருதுகின்றன.

ஹெலிக்சன் நிறுவனர் விஜய் சங்கர் ராஜா கூறுகையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் சுகாதார நிறுவனம் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிறுவனம் ஆகியவற்றிற்காக இந்த சாதனத்தை வாங்க, அரசு சாரா நிறுவனங்கள் இந்த ஸ்டார்ட் அப்-ஐ அணுகியுள்ளன.

இந்த சாதனம் மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளுக்கும் கண்காணிபுப் பணிகளில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருள் தளம் நோயாளியின் அளவுருக்களுக்கான எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இதை நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுடனான ஆன்லைன் ஆலோசனைகளில் பயன்படுத்தலாம் என்று சாதனத்தின் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: தமிழகத்தில் சற்று சரிவை கண்டுள்ள கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 109 பேர் பலி...

Trending News