இந்தியாவின் மிகச் சிறிய குழந்தையாக மும்பை மாநிலத்தில் 22 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை கருதப்படுகிறது.
மும்பையில் உள்ள பாந்த்ராவைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ரெத்திகா. கடந்த மே மாதம் வயிற்றுவலிக்காக சாண்டாகுரூசில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கருவுற்று 22 வாரங்கள் மட்டும் ஆன நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. முழு வளர்ச்சியுடன் பிறந்தாலும், மிகச்சிறிய அளவில் 610 கிராம் மட்டுமே குழந்தை இருந்தது.
சாதாரண குழந்தை போல, செவி, விழித்திறன்களுடன், எந்தக் குறையும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது. இந்த குழந்தைக்கு நிர்வான் என்று பெயரிடப்பட்டு, ஐ.சி.யூ.வில் பராமரிக்கப்பட்டு 3 கிலோ 800 கிராம் எடையுடன் தற்போது நலமாக உள்ளது.