உங்கள் போனில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2024, 05:39 PM IST
  • ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் நிரம்பினால், போன் வேலை செய்யும் வேகம் குறையலாம்.
  • சேமிப்பகம் நிரம்புவதில் சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்.
  • பயனற்ற கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கலாம்.
உங்கள் போனில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை title=

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு. தற்போது சந்தையில் வரும் ஸ்மார்ட்போன்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் வருகின்றன. இருப்பினும், பல சமயங்களில் ஸ்மார்ட்போன்களில் சேமிப்பக சிக்கல்களை எதிர்கொள்வதை நாம் பலமுறை அனுபவித்திருப்போம்.

ஸ்மார்ட்ஃபோன் சேமிப்பகம் என்பது ஒரு ஸ்மார்ட்போனில் தரவைச் சேமிப்பதற்கான இடமாகும். இது உங்கள் செயலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள் மற்றும் பிற தரவைச் சேமிக்கும் இட வாதியை வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் நிரம்பினால், ஸ்மார்ட்போன் வேலை செய்யும் வேகம் குறையலாம் மற்றும் புதிய ஆப்களை நிறுவுவதில் அல்லது புகைப்படம் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த சிக்கலை தவிர்க்க உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் இடத்தை உருவாக்குவதற்கான சில வழிகளை அறிந்து கொள்ளலாம்.

சேமிப்பகம் நிரம்புவதில் சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

ஆப்ஸ் - உங்கள் மொபைலில் அதிக ஆப்ஸ்கள் இருந்தால், அது அதிக சேமிப்பிடத்தை பயன்படுத்தும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் - உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக இடத்தை எடுக்கும்.

ஆடியோ - இசைக் கோப்புகளும் அதிக சேமிப்பக இடத்தை பயன்படுத்துகின்றன.

பிற தரவு - கேச் தரவு, உலாவி வரலாறு மற்றும் பிற கோப்புகளும் சேமிப்பிடத்தை நிரப்புகின்றன.

மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

சேமிப்பக இட பிரச்சனையை தீர்க்க கடைபிடிக்க வேண்டியவை

போனில் உள்ள தேவையற்ற செயலிகளை நீக்கவும் - நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை நீக்கவும்.

மேகக்கணியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்கவும் - Google Photos, iCloud அல்லது வேறொரு கிளவுட் சேமிப்பக சேவையைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கிளவுட்டில் சேமிக்கவும்.

உங்கள் மொபைலைத் தொடர்ந்து அப்டேட் செய்யவும் -  நிறுவனம் அளிக்கு அப்டேட்கள் என்னும் மென்பொருள் புதுப்பிப்புகள் பெரும்பாலும் புதிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். இதனால், சேமிப்பக திறன் அதிகரிக்கும்.

SD கார்டைப் பயன்படுத்தவும் - உங்கள் ஸ்மார்ட்போனில் SD கார்டு ஸ்லாட் இருந்தால், கூடுதல் சேமிப்பகத்திற்கு அதிக ஸ்டோரேஜ் வசதியுள்ள SD கார்டை பொருத்தி பயன்படுத்தலாம்.

தேவையற்ற கோப்புகளை நீக்கவும் - தேவையற்ற கோப்புகள், செயலிகளை நீக்கி உங்கள் ஸ்மார்ட்ஃபோனைத் தவறாமல் சுத்தம் செய்யலாம். இதில் பயனற்ற கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கலாம்.

உங்கள் மொபைலின் அமைப்புகளை மேம்படுத்தவும் - பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முடக்குவது, தானாக பதிவிறக்கம் செய்யும் அமைப்பை முடக்குவது போன்ற உங்கள் மொபைலின் அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் சேமிப்பிடத்தை சேமிக்கலாம்.

உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதைத் தவிர்க்கவும் - உங்களுக்கு நல்ல தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேவையில்லை என்றால், நீங்கள் குறைந்த தரத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

கேச் தரவு மற்றும் உலாவி வரலாற்றை நீக்கவும் - உங்கள் ஃபோனின் அமைப்புகளுக்குச் சென்று கேச் தரவு மற்றும் உலாவி வரலாற்றை அழிக்கவும்.

மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News