இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் செய்திகள் பிரச்சனைகளை தடுக்கவும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் ட்ராய் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
இதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக, எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும், அனுமதிக்கப்படாத அங்கீகரிப்படாத, சரிபார்க்கப்படாத URL இணைப்புகள், OTT இணைப்புகள் மற்றும் Android Package Kits என்னும் APK லிங்குகளை பிளாக் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் TRAI கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். உங்களுக்கு SMS மூலம் அனுப்பப்படும் இணைப்பு அங்கீகரிக்கப்பட்ட ப்பட்டியலில் இல்லை என்றால் அந்த இணைப்பு திறக்கப்படாது. இதன் மூலம் மக்கள் மோசடி இணைப்புகளிலிருந்து தப்பிக்கலாம்
எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் அங்கீகரிக்கப்படாத URLகள், OTT இணைப்புகள் மற்றும் APKகளை பிளாக் செய்யுமாறு, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் TRAI ஆகஸ்ட் 20 அன்று கேட்டுக் கொண்டது. லிங்குகளை கொண்ட எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், முதலில் அந்ஹ இணைப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய விதி அமலுக்கு வருவதை அடுத்தும், சுமார் 3,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 70,000 க்கும் மேற்பட்ட இணைப்புகளை அனுமதிப் பட்டியலில் சேர்த்துள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் தனது இணைப்பை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்காத நிறுவனங்கள், அந்த இணைப்பை SMS மூலம் அனுப்ப முடியாது.
ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாக்க TRAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சைபர் மோசடி நடவடிக்கையாக எஸ்எம்எஸ் மூலம் இணையதள லிங்குகளை அனுப்பி, தரவுகள் திருடப்படுவதில் இருந்து மக்களைப் பாதுகாக்க புதிய விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், இனி எந்த நிறுவனமும் அனுமதியின்றி எஸ்எம்எஸ் மூலம் எந்த இணைப்பையும் அனுப்பினால், அது பிளாக் செய்யப்படும் என TRAI தெரிவித்துள்ளது. இது தவறான தகவல் அல்லது தேவையற்ற செய்திகள் மூலம் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கும்.
வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் எஸ் எம் எஸ் செய்தியை அனுப்ப விரும்பும் அனைத்து நிறுவனங்களையும் தங்கள் இணைப்புகளை அனுமதிப்பட்டியலில் சேர்க்குமாறு TRAI கேட்டுக் கொண்டுள்ளது. அனுமதி பட்டியலில் சேர்க்கப்பட்ட இணைப்புகளை SMS மூலம் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. குறிப்பாக வங்கிகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களின் மீது மக்கள் எஸ்எம்எஸ் மீது அதிக நம்பிக்கை இதன் மூலம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ