காரடையான் நோன்பு விரத அடை செய்வது எப்படி

கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2022, 12:27 PM IST
  • இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம்.
  • நோன்புகளிலேயே மிகவும் முக்கியமான நோன்பாகும்.
  • காரடையான் நோன்புக்கு அடை செய்வார்கள்.
காரடையான் நோன்பு விரத அடை செய்வது எப்படி title=

காரடையான் நோன்பு என்பது பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோன்பு என்று அழைக்கின்றனர்.

இந்த நோன்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். அதன்படி கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர். இன்று வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும். அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

பின்னர் அந்த அடையை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். அதேபோல காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும். மேலும் பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் காரடையான் நோன்பு அடை செய்வார்கள்.

இனி காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப், 
காராமணி 1/4 கப், 
தேங்காய் கீரியது அரை கப், 
வெல்லம் 1 கப், 
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், 
தண்ணீர் 2 கப்.

செய்முறை
காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். பின்னர் வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும். 

வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டு நன்றாக கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். காரடையான் நோன்பு அடை ரெடி.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை பொறுப்பேற்காது.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News