ஓமத்தின் பயன்களை தெரிந்து கொள்ளவும்!!

Last Updated : Oct 10, 2016, 12:18 PM IST
ஓமத்தின் பயன்களை தெரிந்து கொள்ளவும்!! title=

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் தேறாமல் இருப்பவர்கள் இந்த ஓம நீரை குடித்து வந்தால் உடல் பலமாகும் .

தொண்டையில் புகைச்சல், இருமல் ஏற்பட்டால் ஓமம், முக்கடுகு , சித்தரத்தை , கடுக்காய் தோல், திப்பிலி வேர்,  அக்கிரகாரம் இவைகளின் பொடி செய்த்து சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் குணமாகிவரும் .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் நூறு கிராம் ஓமத்தை கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற் பிரச்சனைகள் நீங்கும்.

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், சாப்பிட்ட உணவு சீரணமாகவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்தி வந்தால் நல்லது. இதனால் இரும்பல் குணமாகும்.

தண்ணீரில் சிறுது ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து  இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி குணமாகிவரும்.

Trending News