மேகி நூடுல்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: உ.பி ஆய்வக சோதனையில் தோல்வி!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூரில் மேகி நூடுல்ஸ் தரம் ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 29, 2017, 12:09 PM IST
மேகி நூடுல்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: உ.பி ஆய்வக சோதனையில் தோல்வி! title=

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூரில் மேகி நூடுல்ஸ் தரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்தது. எனவே, பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில், நெஸ்லே இந்திய நிறுவனம் மற்றும் மேகி விநியோகஸ்தர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மேகி ஆய்விற்காக அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில் மேகியில் சாம்பல் கண்டண்ட் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. இது மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிவித்தனர். 

இதையடுத்து, நெஸ்லே நிறுவனத்திற்கு ரூ.45-லட்சமும், மூன்று விநியோகஸ்தர்களுக்கு ரூ.15-லட்சமும் மற்றும் இரண்டு விற்பனையாளர்களுக்கு ரூ.11-லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை மறுத்த நெஸ்லே நிறுவனம், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் வரவில்லை. மேகி நூடுல்ஸ் 100 சதவீதம் பாதுகாப்பானது. இது போன்ற குற்றச்சாட்டுகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். விரைவில் அதனை சரி படுத்துவோம் என நெஸ்லே நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார்.

Trending News