ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!

பலருக்கு ஞாபக மறதி வருவது இயல்பான விஷயமாகும். இதை தவிர்க்க, நாம் மூளைக்கான சில பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2024, 02:44 PM IST
  • நினைவு திறனை அதிகரிக்க..
  • மூளைக்கான பயிற்சிகள்!
  • என்னென்ன செய்யலாம்?
ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது! title=

நம் அன்றாட வாழ்வில் நமக்கு நினைநமது நினைவாற்றல் மிகவும் முக்கியமாகும். வீட்டின் சாவியை எங்கே வைத்தோம், எடுத்த பொருளை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவோம். இது, தேர்வுக்கு படிக்கும் சமயங்களில் இந்த ஞாபக மறதி இருந்தால் அது பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டு விடும். இந்த ஞாபக மறதியை தவிர்ப்பதற்கான சில மூளை பயிற்சிகளை பார்க்கலாம்.

இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்ளுதல்:

ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது ஒரு  ஆக்கபூர்வமான செயல் மட்டுமல்ல, நமது நினைவாற்றலை அதிகரிக்கும் செயலும் கூட. இந்த செயல்பாடு மூளையின் பல்வேறு பகுதிகளை தூண்டி, நினைவு திறனை மேம்படுத்த வழி வகுக்கிறது.

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்:

உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது, நமது மூளையையும் ஆக்டிவாக வைத்துக்கொள்ள உதவும். உடற்பயிற்சி, மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. நடைப்பயிற்சி, சைக்ளிங், ஓட்டப்பயிற்சி என, ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்தால் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இருக்குமாம். 

புதிர் விளையாட்டுகள்: 

உடலை போலவே மூளைக்கும் அடிக்கடி ஒர்க் அவுட் தேவைப்படும். அப்போதுதான் அதை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள முடியும். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் புதிர் விளையாட்டுகள் விளையாடுவது முக்கியமாகும். மூளைக்கு வேலை கொடுக்கும் திறன்களுள் ஒன்றான இது, அதன் செயல்பாட்டையும் அதிகரிக்கும். 

படிப்பது:

உலகின் மேதைகள் என கூறப்படுபொருள் திரும்பிப் பார்க்கையில் அவர்களில் பலர் தினசரி ஏதேனும் ஒரு புத்தகத்தை படிப்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி, தினமும் படிப்பது மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வேறு மொழியை கற்றுக் கொள்வதும் கூட நம் நினைவுத்திறனை அதிகப்படுத்துமாம். 

மேலும் படிக்க | வயசானாலும் மூளை சூப்பராக செயல்பட... தேவையான உணவுகளும் - பயிற்சிகளும்!

உணவு: 

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தும் நமது மூளை செயல்பாடு இருக்கும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகள், உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். நட்ஸ், மீன்கள், பச்சை காய்கறிகள் உள்ளிட்டவற்றை இந்த டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். 

தியானம்: 

தியானம் செய்வது நமக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவும். எனவே தினமும் நம் நாளே தொடங்குவதற்கு முன்னர் தியானம் செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கூடுதலாக பதற்றம் மற்றும் மன சோர்வையும் தியானம் குறைக்குமாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... காரணங்களும்.. அதன் ‘ஆபத்தான’ அறிகுறிகளும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News