நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை!

தலைமுடியைப் பற்றி இளைஞர்களும் கவலைப்படும் காலம் இது. நரை முடி இளம் வயதினருக்கும் வந்துவிட்டது என்பது இன்றைய மாறிவரும் சூழலில் கவலை தரும் விஷயம்...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2021, 01:31 PM IST
  • தலைமுடியின் ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்
  • அழகை இயற்கையாக பொலிவூட்டும் வழிமுறை
  • ரசாயன கலப்பற்ற அழகு பொருட்கள்
நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை! title=

அழகுக்கு அழகூட்டும் அலங்காரங்களில் தலை சிறந்தது தலை அலங்காரம். தலை அலங்காரம் என்பது ஒருபுறம், தலைமுடியைப் பற்றி இளைஞர்களும் கவலைப்படும் காலம் இது. நரை முடி என்பது இளம் வயதினருக்கும் வந்துவிட்டது என்பது இன்றைய மாறிவரும் சூழலில் கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

இளம் வயதிலேயே முடி நரைப்பதற்கு காரணங்கள்பல இருந்தாலும், அதற்கான தீர்வு தலைச்சாயம் என்ற ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இந்த ’Hair Dye’கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை 'Die' செய்யும் "dye"களாக இருக்கின்றன. 

கடைகளில் விற்கும் தலைசாயத்தில், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும், முடியை கருமையாக்க உதவும் அமோனியா என்ற ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்புகளால், பல ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. 

Also Read | Beauty Tips: முகச்சுருக்கம் நீங்கி, அகத்தின் அழகு முகத்தில் எதிரொலிக்க அழகுக் குறிப்புகள்

இந்த பாதிப்பில் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரே வழி, கடைகளில் விற்கும் "dye"களை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுங்கள். வெண்ணிறமாய் மாறும் நரை முடியின் தன்மையை இயற்கையாக கருமையாக்கும் இந்த வழிமுறைகள் எந்த பக்க விளையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு மருந்துகளில் கிடைக்கும் அவுரிப்பொடி, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், நரை முடி நாளடைவில் கருமையாக மாறும். இது மிகவும் எளிய வழிமுறை. சாதாரணமாய் தலைக்கு எண்ணெய் பூசுவதைப் போல பயன்படுத்தினால் போதும்.

வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி என நான்கு பொருட்களையும் அரைத்து, அந்தக் கலவையை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசினால் போதும், நரைமுடியின் வெளுப்பு, கருப்பாக மாறத் தொடங்கும். 

Also Read | மூங்கிலின் மருத்துவ பண்புகள்

தேயிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டிக் கொண்டு, அத்துடன் சோற்றுக் கற்றாழையில் இருக்கும் தசைப்பகுதி மற்றும் மருதாணி பவுடரை கலந்து 4 மணி நேரம் ஊற வையுங்கள். அதனை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி நிறம் மாறும்.

செம்பருத்திச் செடியின் இதழ்களை நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்து, தலையில் தடவி வவும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால், வெண்ணிற முடியின் நிறமும் சற்று மாறும், தலைமுடியும் பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும்.

பீட்ரூட் சாறு மற்றும் கருவேப்பிலை சாறு சம அளவு எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தலையை நன்கு அலசவும். இது கூந்தலை பொன்னிறத்தில் அழகாய் மின்னச் செய்யும்.

Also Read | இளமையிலேயே பக்கவாதம் வரக் காரணம் இதுதான்!  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News