உணவு என்பது மனிதனின் இன்றியமையாத தேவை. உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மூன்று வேலை உணவு உண்பது அவசியம். இருப்பினும், சிலர், உடல் இளைக்க வேண்டும் என்றோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெறும் வயிற்றுடன் தூங்க செல்லும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆனால் உடல் நலத்திற்கு இது நல்லதல்ல.
வெறும் வயிற்றில் தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரவில் லைட்டான உணவை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, முற்றிலும் தவிர்ப்பது, பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தசைகள் பலவீனமாகின்றன
தசைகள் வலுவாக இருக்க சரியான நேரத்தில் சாப்பிடுவதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் மிகவும் முக்கியம். ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் தூங்கினால், அது புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களின் செயல்திறனை பாதிக்கிறது. அதனால் தசை பலவீனம் தொடங்குகிறது. எனவே, ஆரோக்கியமான உடலுக்கு இரவு உணவு மிகவும் முக்கியமானது.
ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
மனநிலையில் மாற்றங்கள்
வெறும் வயிற்றில் தூங்குவது மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், கோபம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வு எப்போதும் இருக்கும். எனவே, இரவில் உணவை தவிர்ப்பதற்கு பதிலாக, எளிதாக செரிக்கக் கூடிய வகையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
தூக்கம் தொடர்பான சிக்கல்கள்
இரவில் பசியுள்ள வயிற்றில் தூங்குவதன் மிகப்பெரிய பாதிப்பு என்னவென்றால், அது தூக்கத்தை பாதிக்கிறது. நீங்கள் இரவில் பசியுடன் இருக்கும்போது, மூளை உங்களை சாப்பிட வேண்டும் என எச்சரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக பசி உணர்வு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. நீங்கள் அடிக்கடி இரவில்வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் சென்றால், எதிர்காலத்தில் நீங்கள் தூக்கம் தொடர்பான பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ALSO READ | வெல்லத்திற்கு இளமைக்கும் சம்பந்தம் உள்ளதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!!
உடல் ஆற்றல் குறையும்
இரவில் போதுமான தூக்கம் கிடைப்பது உடல் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் பசியுடன் தூங்கினால், பசி காரணமாக நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாது, இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் உற்சாகம் இன்றி சோர்வாக இருப்பீர்கள். அதனால்தான் இரவில் தூங்குவதற்கு முன் ஏதாவது ஒன்றை சாப்பிடுவது முக்கியம்.
மறுப்பு: ஜீ ஹிந்துஸ்தானில் வெளியிடப்படும் உடல்நலம் குறித்து வெளியிடப்படும் அனைத்து கட்டுரைகளும் மருத்துவர்கள், நிபுணர்கள் வழங்கும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. உடல் நலம் நோய் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
ALSO READ | என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; பப்பாளி காய் ஒன்றே போதும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR