எடை குறையணுமா? நல்லா தூங்குங்க போதும்!! அசத்தல் வெயிட் லாஸ் டிப்ஸ்!!

Sleep and Weight Loss:மோசமான தரமற்ற தூக்கம் எடை இழப்பு முயற்சிகளை எவ்வாறு தவிடுபொடியாக்குகிறது என்பதை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2023, 11:29 AM IST
  • உறக்கம் மற்றும் எடை இழப்புக்கு இடையேயான தொடர்பு விசித்திரமான ஒரு தொடர்பாகும்.
  • உறக்கமின்மை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
  • சரியான உறக்கமின்மை நம் எடை இழப்பு முயற்சியை எவ்வாறு பாதிக்கிறது?
எடை குறையணுமா? நல்லா தூங்குங்க போதும்!! அசத்தல் வெயிட் லாஸ் டிப்ஸ்!!  title=

எடை இழப்பு குறிப்புகள்: உடற்பயிற்சி மற்றும் உணவைத் தவிர, எடை இழப்பு வழக்கத்தை பாதிக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று தூக்கம். இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மோசமான தரமற்ற தூக்கம் எடை இழப்பு முயற்சிகளை எவ்வாறு தவிடுபொடியாக்குகிறது என்பதை இங்கே காணலாம்.

அதிகரிக்கும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நாம் அனைவரும் சரியான உணவு, உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என இவற்றில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறோம். இவை எடை நிர்வாகத்தின் முக்கிய கூறுகளாக இருந்தாலும், நமது எடை இழப்பு பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு காரணி பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது. அதுதான் உறக்கம். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான அம்சமாக இருந்தாலும், பலரால் அதிகம் புறக்கணிக்கப்படும் விஷயமாகவும் இது உள்ளது. மோசமான தரற்ற உறக்கம், ஒழுங்கற்ற உறக்க நேரங்கள் அல்லது தூக்கமின்மை ஆகியவை எடை இழப்பு முயற்சிக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கலாம். 

உறக்கம் மற்றும் எடை இழப்புக்கு இடையேயான தொடர்பு விசித்திரமான ஒரு தொடர்பாகும். ஆரோக்கியமான உடலுக்கான நமது தேடலில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

சரியான உறக்கமின்மை நம் எடை இழப்பு முயற்சியை எவ்வாறு பாதிக்கிறது

- ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது: தூக்கத்திற்கும் எடை இழப்புக்கும் இடையிலான இணைப்பு ஹார்மோன்களுடன் தொடங்குகிறது. நமக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நமது உடலின் ஹார்மோன் சமநிலை சீர்குலைந்துவிடும். இரண்டு ஹார்மோன்கள், குறிப்பாக, செயல்பாட்டுக்கு வருகின்றன - கிரெலின் மற்றும் லெப்டின். கிரெலின் என்பது பசியைத் தூண்டும் ஹார்மோன் ஆகும், அதே சமயம் லெப்டின் முழுமையைக் குறிக்கிறது. 

ஒருவர் முறையான உறக்கத்தை பெறவில்லை என்றால் கிரெலின் அளவுகள் உயர்ந்து, லெப்டின் அளவுகள் குறைந்து, அதிகப்படியான உணவை உண்பதற்கான சக்திவாய்ந்த செய்முறையை அது உருவாக்குகிறது. இதனால் இரவில் பசி ஏற்படுகிறது, பகலில் நொறுக்குத்தீனிக்கான ஆசை ஆகியவை ஏற்படுகின்றன. இவை நமது எடை இழப்பு முயற்சிகளை நாசப்படுத்தலாம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! பாலுடன் தவறுதலாக கூட இவற்றை சாப்பிட வேண்டாம்! 

- அதிக நள்ளிரவு பசி: தூக்கமின்மை நமது ஹார்மோன்களை மட்டும் பாதிப்பதில்லை. இது நமது மூளையின் வெகுமதி மையங்களையும் பாதிக்கிறது. தூக்கமின்மை உணவு வெகுமதிகளுக்கு, குறிப்பாக அதிக கலோரி, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளின் பக்கம் நாம் ஈர்க்கப்பட காரணமாகிறது.

- ஆற்றல் குறைவு: உறக்கமில்லாத இரவை அனுபவித்தால், அதன் பிறகு நாம் மந்தமான, குறைந்த ஆற்றல் கொண்ட நாளையே எதிர்கொள்வோம். இந்த ஆற்றல் பற்றாக்குறை உங்கள் உடல் செயல்பாடு அளவை பாதிக்கும். நீங்கள் சோர்வாக இருக்கும்போது, ​​சுறுசுறுப்பான எந்த செயலையும் செய்ய முடியாது. இதன் விளைவாக, நாம் எரிக்கும் கலோரிகளின் அளவும் குறைவாகும். இது நமது எடை இழப்பு முயற்சியை முடக்குகிறது. 

- மீட்புக் காரணி: உடற்பயிற்சிக்குப் பிந்தைய மீட்புக்கு தூக்கமும் ஒரு முக்கிய அங்கமாகும். ஆழ்ந்த உறக்கத்தின் போது, உங்கள் உடல் தசை திசுக்களை சரிசெய்து மீண்டும் உருவாக்குகிறது. உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், உங்கள் உடல் முழுமையாக குணமடையாமல் போகலாம். இது உடற்பயிற்சி செயல்திறன் குறைவதற்கும் தசை இழப்புக்கும் வழிவகுக்கும்.

- ஆரோக்கியமான தூக்கத்திற்கான பாதை: தூக்கத்திற்கும் எடை இழப்புக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது உங்கள் எடை மேலாண்மை உத்தியில் தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு இரவில் 7-9 மணி நேரம் தடையின்றி உறங்க வேண்டும். 

இறுதியாக, எடை இழப்பு முயற்சியில் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை போல உறக்கத்திற்கு  இருக்கும் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. மோசமான தூக்கம் ஹார்மோன்களை சீர்குலைக்கும், பசியை அதிகரிக்கும், உங்கள் ஆற்றலை அழிக்கும், மீட்புக்கு இடையூறு விளைவிக்கும். தூக்கம் மற்றும் எடை இழப்புக்கு இடையே உள்ள தொடர்பை புரிந்துகொண்டு, உங்கள் உறக்கத்தை மேம்படுத்தினால் ஆரோக்கியமான முறையில் எடையை குறைப்பதில் வெற்றி பெறலாம். உங்கள் எடை இழப்பு பயணத்தில் நல்ல இரவு தூக்கம் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | க்ரீன் டீ தெரியும்... அது என்ன ப்ளூ டீ? - புற்றுநோய் முதல் எடை குறைப்பு வரை - அட்டகாசமான நன்மைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News