சில கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது... விளக்குகிறார் இதய நிபுணர்!

Heart Health: ஆரோக்கியமற்றதாக தோன்றும் குறிப்பிட்ட 4 விஷயங்கள் உண்மையில் இதயத்திற்கு ஆரோக்கியமானவை என சுகாதார நிபுணர்கள் என கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2023, 10:16 PM IST
  • சில வகையான கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
  • காய்கறிகள் மற்றும் பழங்களிலும், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
  • பெரும்பாலானோர் கொழுப்பு உங்கள் இதயத்தின் எதிரி என்று நினைக்கிறார்கள்.
சில கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது... விளக்குகிறார் இதய நிபுணர்! title=

இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் இதயம் தொடர்பான நோய்களும் ஒன்றாகும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மரபியல் காரணிகள் மட்டுமின்றி உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான வேறு சில காரணிகளும் இதய நோயில் ஈடுபடுகின்றன. இதயம் ஆரோக்கியமாக இருக்க, சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். அதை பராமரிக்க முடியாததால், மாரடைப்பு அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இதனுடன், சில கட்டுக்கதைகளும் காணப்படுகின்றன. பல உணவுகள் ஆரோக்கியமற்றதாகத் தோன்றினாலும் உண்மையில் உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும். இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின், டாக்டர் நிரஞ்சன் ஹிரேமத், மூத்த ஆலோசகர் - இருதய மற்றும் பெருநாடி அறுவை சிகிச்சை,  சில கட்டுக்கதைகளை பற்றி விளக்கினார். சில உணவுகளைப் பற்றி அவர் விளக்கி சொல்லுகையில், சில உணவுகள் உங்களுக்கு ஆரோக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவற்றை உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது என விளக்கினார்.

1. அனைத்து கொழுப்புகளும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்

ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக உணவில் கவனம் செலுத்துபவர்கள், கொழுப்பு என்ற பெயரையே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர், பெரும்பாலானோர் கொழுப்பு உங்கள் இதயத்தின் (Heart Health) எதிரி என்று நினைக்கிறார்கள். இருப்பினும், டாக்டர் நிரஞ்சன் அளித்த தகவலின்படி, அனைத்து வகையான கொழுப்புகளும் தீங்கு விளைவிப்பதில்லை. நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதே சமயம் நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுகள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை.

2. கொலஸ்ட்ரால் இதயத்தின் எதிரி

கொலஸ்ட்ரால் இதயத்தின் எதிரி என நாம் கருதுகிறோம் ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் மட்டுமே இதயத்திற்கு எதிரி. டாக்டர் நிரஞ்சனின் கூற்றுப்படி, நல்ல கொலஸ்ட்ரால், உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என்றும் கெட்ட கொழுப்பு குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) என்றும் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை சேதப்படுத்துகிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கல்லீரலுக்கு கொண்டு செல்ல வேலை செய்கிறது.

மேலும் படிக்க | பற்களின் மஞ்சள் அடுக்கு நீங்கனுமா?, இந்த 4 வீட்டு வைத்தியம் மட்டும் போதும்

3. அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் தீங்கு விளைவிக்கும்

அனைத்து வகையான கார்போஹைட்ரேட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சில வகையான கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன, இது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களிலும், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

4. சப்ளிமெண்ட்ஸ் போதுமானது

இப்போதெல்லாம் பலர் சப்ளிமெண்ட்ஸ் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். உணவில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால், பலர் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள், இது ஒரு தவறான பழக்கம். சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது, ஆனால் அவற்றை முழுமையாகச் சார்ந்திருப்பது தவறாக இருக்கலாம். உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஒன்றாக சேர்ந்து உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று டாக்டர் நிரஞ்சன் கூறினார். எனவே, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் உணவில் இருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்துக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

பொறுப்பு மறுப்பு : இருப்பினும், ஒவ்வொரு நபரின் உடல்நிலையை பொறுத்து, சில உணவுகள் அவருக்கு ஆரோக்கியமானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருக்கலாம். எனவே, ஒரு மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணருடன் கலந்தாலோசித்த பின்னரே உங்களுக்காக சரியான உணவைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க | அசிங்கமான மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News